பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு

Updated : ஆக 22, 2011 | Added : ஆக 21, 2011 | கருத்துகள் (4)
Share
Advertisement
அதிகாரிகள், டெலிபோன் செலவு, உச்சவரம்பு, Upper ceiling, phone bills, High officials,

அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கான தொலைபேசி இணைப்புகளுக்கு மாதாந்திர கட்டணம், அழைப்புகளின் அடிப்படையில் இல்லாமல், தொகையின் அடிப்படையில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள தொலைபேசி இணைப்புகளுக்கு, மாதந்தோறும் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கான தொகையை அந்தந்த துறை மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டு வந்தது. கூடுதாக ஆகும் தொகை, அதிகாரியிடம் பிடித்தம் செய்யப்பட்டது.

முன்பு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஒரே "பிளான்' அடிப்படையில் சேவையை வழங்கியது. இதனால், அழைப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிரமம் இல்லாமல் இருந்தது. பின்னர், பி.எஸ்.என்.எல்., வெவ்வேறு வகையான, "பிளான்'களை அறிமுகப்படுத்தியதால், ஒரே சீரான தொலைபேசி அழைப்புகள் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒவ்வொரு அதிகாரிக்கும், அந்தந்த, "பிளான்' அடிப்படையில், கூடுதல் தொகையை வெவ்வேறு விதமாக பிடித்தம் செய்ய வேண்டியிருந்தது. இதனால், ஒவ்வொரு துறையில் இருந்தும் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வந்தன. இதுதவிர, வீடுகளுக்கான இணைப்புகளுக்கு, "பிராட் பேண்ட்' வசதி அளிக்கக் கோரியும், பல்வேறு அதிகாரிகளிடம் இருந்து முறையீடுகள் வந்தன.


எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா, தலைமைச் செயலர், ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், முதல்வரின் செயலர்கள், கவர்னரின் செயலர்கள், கலெக்டர்கள், டி.ஆர்.ஓ.,க்கள், கவர்னரின் டாக்டர், செய்தித் துறை இயக்குனர், கலெக்டர்களின் (பொது) பி.ஏ.,க்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், சட்டம் ஒழுங்கு ஐ.ஜி., உளவுத் துறை டி.ஐ.ஜி., மற்றும் ஐ.ஜி., உள்பட 62 வகையான பதவிகளில் இருப்பவர்களுக்கு, உச்சவரம்பு ஏதுமின்றி முழு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.


இரண்டாவது தொகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதம் ஆயிரம் அழைப்புகள் (பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச அழைப்புகள் உள்பட) பேசிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அனைத்து அரசு துறை செயலர்கள், கூடுதல் செயலர்கள், கமிஷனர்கள், போலீஸ் ஐ.ஜி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், லஞ்ச ஒழிப்பு இயக்குனர், டி.என்.பி.எஸ்.சி., தலைவர், ஐகோர்ட் பதிவாளர்கள் உள்பட 34 வகையான பதவிகளை வகிப்போர், இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.மூன்றாவது தொகுப்பில், அனைத் துறைத் தலைவர்கள், அமைச்சர்களது சீனியர் பி.ஏ.,க்கள், கெசடட் பி.ஏ.,க்கள் உள்பட 57 வகையான பதவிகளில் இருப்பவர்களுக்கு, மாதம் 500 அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள (பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச அழைப்புகள் உள்பட) அனுமதிக்கப்பட்டிருந்தது.


இந்த மூன்று தொகுப்புகளிலும் இடம்பெறாத, இதர அதிகாரிகளுக்கு, பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச அழைப்புகள் உள்பட மொத்தம் 300 அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பயன்படுத்தும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையில் கணக்கிடாமல், குறிப்பிட்ட கட்டணத்தை மாதந்தோறும் உச்சவரம்பாக, அதிகாரிகளின் வீட்டு இணைப்புகளுக்கு நிர்ணயிக்கலாம் என்று, நிதித் துறை துணைச் செயலர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுதவிர, அவரவர் விரும்பும் தொலைபேசி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுக் கொள்ளவும், பிராட் பேண்ட் போன்ற இணைப்புகளை, அரசு நிர்ணயிக்கும் உச்சவரம்பு கட்டணத்துக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.


இதை பரிசீலித்த தமிழக அரசு, முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதவிகளில் இருப்பவர்களுக்கு எவ்வித கட்டண உச்சவரம்பும் கிடையாது என்று முடிவு செய்துள்ளது. இரண்டாவது தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளுக்கு, மாதம் 1,300 ரூபாயும், மூன்றாவது தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளுக்கு மாதம் 800 ரூபாயும், நான்காவது தொகுப்பில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு மாதம் 600 ரூபாயும் உச்சவரம்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தொலைபேசி நிறுவனங்கள் விதிக்கும் சேவை வரியும் சேர்த்து வழங்கப்படும்.


அதிகாரிகள் தாங்கள் விரும்பும் தொலைபேசி நிறுவனங்களில் இணைப்பு பெறலாம். எந்த "பிளான்' வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இன்டர்நெட் வசதி உள்பட கூடுதல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அரசு நிர்ணயித்துள்ள உச்சவரம்புக்குள் அவற்றை பயன்படுத்த வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கு அதை விட கூடுதலாக ஆகும் செலவை, அதிகாரிகள் ஏற்க வேண்டும். புதிய இணைப்புகள் பெறும் போது, தொலைபேசி கருவிக்கான கட்டணத்தை அதிகாரிகளே ஏற்க வேண்டுமென, பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது.-நமது சிறப்பு நிருபர்-


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Chennai,இந்தியா
22-ஆக-201113:55:59 IST Report Abuse
Tamilan நல்ல முன்னேற்றம்
Rate this:
Share this comment
Cancel
Ram Priyan - chennai,இந்தியா
22-ஆக-201113:52:44 IST Report Abuse
Ram Priyan சுக்வன் ,சட்யமொர்த்தி, உங்களுக்கு தமில் வராத்து இல்ல. இது தமிழ் பத்திரிக்கை ச்சீ என்ன தேசமோ என்ன மக்களோ
Rate this:
Share this comment
Cancel
Shankar Sathyamurthy - chennai,இந்தியா
22-ஆக-201107:20:32 IST Report Abuse
Shankar Sathyamurthy The telephone bill of Thiru Rajesh Lakhani during his tenure of the Commissioner Corporation of Chennai will reveal how much amount he spent on telephone alone from Corporation funds! Will the Government of Tamil Nadu review his telephone expenditure for the past 3years?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X