செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆணழகனுக்கு காப்பு| Dinamalar

செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆணழகனுக்கு 'காப்பு'

Added : மார் 20, 2022 | கருத்துகள் (5) | |
கொண்டிதோப்பு:கொண்டிதோப்பு, ஜிந்தா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினாதேவி, 58. இவர் நேற்று, கொண்டிதோப்பு, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்று திரும்பினார்.அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது செயினை பறித்து தப்பினார். ஏழுகிணறு போலீசாரின் விசாரணையில், மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பாசில், 22, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆணழகனுக்கு 'காப்பு'

கொண்டிதோப்பு:கொண்டிதோப்பு, ஜிந்தா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினாதேவி, 58. இவர் நேற்று, கொண்டிதோப்பு, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்று திரும்பினார்.



அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் அவரது செயினை பறித்து தப்பினார். ஏழுகிணறு போலீசாரின் விசாரணையில், மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பாசில், 22, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது, ஏற்கனவே கொரட்டூர் காவல் நிலையத்தில், செயின் பறிப்பு வழக்கு உள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.



பி.டெக் பட்டதாரியான முகமது பாசில், ஷலின் என்பவருடன் சேர்ந்து 'ஐ - போன்' வியாபாரம் செய்து வந்தார். அதில் கூட்டாளி ஏமாற்றவே கடனாளி ஆனார்.இதனால், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.முகமது பாசில், 2020ம் ஆண்டு, இளையோருக்கான ஆணழகன் போட்டியில் பங்கேற்று 'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X