சென்னை:போதை பொருள் விற்பனையை ஒழிக்க, சென்னை முழுதும் போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், இம்மாதம் 13ம் தேதியிலிருந்து ஏழு நாட்கள், நகரின் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் ஈடுபட்டு குட்கா, மாவா விற்பனை தொடர்பாக, 108 வழக்குகள் பதிவு செய்து, 110 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 210 கிலோ குட்கா, 14 கிலோ மாவா மற்றும் 1,090 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement