விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் இறந்தார்.விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புதுஇளவரசன்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகண்டன், 31; இவரது மனைவி பஞ்சவர்ணம், 27; சிவகண்டன் தாய் சகுந்தலா, 62; மூவரும் நேற்று முன்தினம் இரவு கூரைவீட்டில் துாங்கினர். அப்போது, வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் வீடு தீப்பிடித்து எரிந்தது. சிவகண்டன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து சிவகண்டன் உடலை மீட்டனர். பஞ்சவர்ணம், சகுந்தலா ஆகியோர் தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.