ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு

Added : மார் 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருப்பதி--திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் ஒரே நாளில், 5 கோடி ரூபாயை கடந்து உள்ளது.கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கத் துவங்கி உள்ளது.தற்போது திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரம், சீனிவாசம், பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன
 ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு

திருப்பதி--திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் ஒரே நாளில், 5 கோடி ரூபாயை கடந்து உள்ளது.



கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கத் துவங்கி உள்ளது.தற்போது திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரம், சீனிவாசம், பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும், 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.



நேற்று முன்தினம், 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மேலும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய வருமானத்கை கணக்கிட்டதில், ஒரே நாளில், 5.13 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கி உள்ளதை அடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
21-மார்-202210:34:36 IST Report Abuse
Samathuvan அப்ப நாட்டுல நிறைய கள்ளப்பணம் புழங்குது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-மார்-202206:31:34 IST Report Abuse
Mani . V ஆமா, அவர் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறாரா?
Rate this:
Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா
21-மார்-202210:35:05 IST Report Abuse
Alvarkadiyan. "chari institutions" வருமான வரி செலுத்த அவசியம் இல்லை....
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
21-மார்-202210:57:07 IST Report Abuse
vivek c maniஅவர் பணத்தை வெச்சு அரசு மத்த மத செலவை செய்ரங்க . அது சரி இது மாதிரி சர்ச்சுங்க , மசுதிங்கே வருமானம் ஏன் கணக்கு காட்டுவதில்லை? அவங்க எத்தனை வரி கட்றாங்கன்னு சொல்ல முடியுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X