பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் அடம் பிடிப்பது ஏன்?

Updated : மார் 21, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கவனம் திரும்புவதால் விபத்துகள் அதிகம் கோவையில் ரோடுகளை ஒட்டியுள்ள ரயில்வே இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பரப் பலகைகளால், வாகன ஓட்டிகளின் கவனம் திரும்பி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.கோவை மாவட்டத்தில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியார் இடங்களில், அரசின் முறையான அனுமதியின்றி, விதிகளை மீறி ஏராளமான


கவனம் திரும்புவதால் விபத்துகள் அதிகம்

கோவையில் ரோடுகளை ஒட்டியுள்ள ரயில்வே இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பரப் பலகைகளால், வாகன ஓட்டிகளின் கவனம் திரும்பி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியார் இடங்களில், அரசின் முறையான அனுமதியின்றி, விதிகளை மீறி ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் அனைத்துமே, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மீறுவதோடு, அப்பட்டமாக வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்துக்கு அடிகோலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதியற்ற இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கொடுத்தாலும், அகற்ற வேண்டிய பொறுப்பு, கோவை மாநகராட்சி உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது.அவை அகற்றப்படாதபட்சத்தில், ஐகோர்ட் உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பிலுள்ள மாவட்ட நிர்வாகம், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.



latest tamil news



பிரமாண்டமான இந்த விளம்பரங்களால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திலுள்ள பல அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அலுவலர்களுக்கும் பங்கு செல்வதாக புகார் கிளம்பியுள்ளது.அதற்கேற்ப, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து பெயரளவுக்கு அறிவிப்பை வெளியிடுவதோடு, தன் பணியை நிறுத்திக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில், இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நாளுக்கு நாள் புதிய விளம்பரப் பலகைகளும் முளைத்து வருகின்றன.
பல கட்டடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்து, தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. ஆத்துப்பாலம், நீலம்பூர், மதுக்கரை, சின்னியம்பாளையம் பாப்பம்பட்டி பிரிவு போன்ற முக்கிய ரோடுகளின் சந்திப்புகளிலும், ரோட்டோரங்களிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும்எக்கச்சக்கமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சமீபமாக முக்கிய ரோடுகளை ஒட்டியுள்ள ரயில்வே இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைப்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.


latest tamil news



ரோட்டோரங்களில் உள்ள தனியார் இடங்களில், வைக்கப்படும் விளம்பரப் பலகைகளுக்கு சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டாலும், அந்த விளம்பரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்பது அரசின் விதிமுறை.அதேபோல, ரோட்டை ஒட்டியுள்ள ரயில்வே இடங்களில் விளம்பரம் வைக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம்.
இதை ஐகோர்ட் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் வைக்கப்படும் விளம்பரங்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்ற விதிமுறையை வைத்துக் கொண்டு, ரோட்டோரத்தில் ரயில்வே இடங்களில் வைக்கப்படும் விளம்பரங்களுக்கும் அனுமதி பெறப்படுவதில்லை.
இந்தியாவிலேயே தமிழகம் விபத்துக்களில் முதலிடம் வகிப்பதற்கு, இத்தகைய விளம்பரப் பலகைகளும் காரணம். அதிக விபத்துக்கள் நடப்பது பற்றி கவலை தெரிவிக்கும் முதல்வர், அதற்கு அடிகோலும் விளம்பரங்களை அகற்றவும், அதிரடி உத்தரவு பிறப்பிப்பது அவசியம்.


-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-மார்-202214:27:00 IST Report Abuse
NicoleThomson இந்த பிளேஸ் பெனர்கள் ஒரு கொலைக்கருவி என்பதனை சென்னை சுபஸ்ரீ கொலைவிவகாரத்தில் நீதிமன்றம் கற்றுக்கொண்டிருக்கும் என்றே நம்புகிறேன் இன்னமும் அப்படி என்ன தூங்கி வழிதல் வேண்டியிருக்கு ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-மார்-202210:17:36 IST Report Abuse
duruvasar அடங்க மறு அத்துமீறும் என கொள்கையை பரப்பும் அமைப்பு உள்ள ஊரில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். கேட்டால் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கும் அம்பேத்கார் மோட்டாரை காட்டுவார்கள். இன்னொருவர் எங்கள் கட்சியில் இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என நீதிமன்றத்தில் பிராமணபத்திரம் தாக்கல் செய்தார். அதற்க்கு அவரை அயல்நாடுகளில் பாராட்டி மகிழ்ந்தார்கள் என பீலா உட்டுக்கொண்டார்கள். சிரிப்பு போலீஸ் மாநிலத்தில் இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X