சாலை விபத்துகளை குறைப்பதே முதன்மை இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

Updated : மார் 21, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை: சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 21) பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ‛தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா?' எனக்
TamilnaduCM, Stalin, Assembly, DMK, Road Accident, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், சட்டசபை, திமுக, சாலை விபத்து

சென்னை: சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 21) பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ‛தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதற்காக ‛இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48' உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு இதுவரை ரூ.29 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 33,247 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டம் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.


இரங்கல் தீர்மானம்:


கூட்டத்தொடர் துவங்கியதும் முன்னாள் எம்எல்ஏ.,க்கள் கோ.ஜானகிராமன், எம்.கல்பனா, மாரப்பன், ரசாக், பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
22-மார்-202204:57:45 IST Report Abuse
arudra1951 விபத்துகளை குறைக்க சாலைகளின் இருமருங்கிலும் உங்கள் கட்சிக்கொடிகளை நட்டு வளருங்கள்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
21-மார்-202220:12:41 IST Report Abuse
Fastrack உக்ரெய்னில் இறந்தோருக்கு இன்று சீன விமான விபத்தில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கலாம்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-மார்-202220:05:57 IST Report Abuse
a natanasabapathy சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையில உள்ளது. எவனும் ஹெல்மெட் அணிவது கிடையாது ஒரு வண்டி யில் 3 பேர் செல்கிறான். பெண்களும் இதில் விதி விலக்கல்ல பாதி பேரிடம் ஓட்டுநர் உரிமம் கிடையாது வண்டி க்கும் rc கிடையாது இரவு பகல் பாராது wrong route இல் செல்கிறான். நடை பாதையை முழுமையாக ஆக்கிரமித்து கடை போட்டு உள்ளான் ஆளும் கட்சி நிர்வாக களுக்கு மாமூல் கொடுப்பதால் நடவடிக்கை எடுக்க படுவதில்லை.. சென்னை therkku உஸ்மான் சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து பனகல் பூங்கா வரை irandu பக்க நடை பாதைகளும் muzhuthaaka ஆக்கிரமிக்க பட்டு உள்ளன. நடை பாதையிலும் இரு சக்கர வாகனங்கள ஒட்டி வருகிறார்கள் காவல் துறையினர் கண்டு கொள்வது இல்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் முதல்வர் சனி நாயிறு கிழமையில் உஸ்மான் சாலை க்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X