மண்டல தலைவர்கள் பதவிகள் பிரிப்பதில் தி.மு.க.,வில் மோதல்: அமைச்சர் வெளிநடப்பு

Updated : மார் 21, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை: மதுரையில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜனுக்கும் நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட அமைச்சர் வெளிநடப்பு செய்தார்.மார்ச் 30ல் மண்டலம் மற்றும் குழுத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. தி.மு.க.வில் இப்பதவிகளுக்கு யாரை நியமிப்பது

மதுரை: மதுரையில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜனுக்கும் நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட அமைச்சர் வெளிநடப்பு செய்தார்.



latest tamil news



மார்ச் 30ல் மண்டலம் மற்றும் குழுத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. தி.மு.க.வில் இப்பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, பொன் முத்துராமலிங்கம், தளபதி, மணிமாறன் மற்றும் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாட்டுத்தாவணி ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் அமைச்சர் தியாகராஜனுக்கும் பொன்.முத்துராமலிங்கத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் பாதியிலேயே முடிந்தது.


latest tamil news


கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:மத்திய தொகுதிக்கு உட்பட்டு ஒரு மண்டலம் மற்றும் இரண்டு குழுத் தலைவர்களை நானே நியமித்துக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு பொன்.முத்துராமலிங்கம் 'மேயர் பதவியை யாரிடமும் தெரிவிக்காமல் முடிவு எடுத்துவிட்டு மண்டலத் தலைவர் நியமிப்பதிலும் தலையிட வேண்டாம்' என தெரிவித்தார்.

அமைச்சர் பதில் கூற முயன்றபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதிருப்தியடைந்த அமைச்சர் பாதியிலேயே வெளியேறினார்.
பின், பொன் முத்துராமலிங்கத்திற்கும் தளபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட, அமைச்சர் மூர்த்தி சமரசம் செய்தார். தளபதியும் கோபமாக வெளியேற கூட்டம் பாதியிலேயே முடிந்தது என்றனர். இவ்விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
21-மார்-202215:36:48 IST Report Abuse
Soumya அடேங்கப்பா உங்க கட்சி பதவி சண்டையில் குடும்ப தலைவிகளின் ஆயிரம் ஓவாவை மறந்துராதீங்கடா
Rate this:
Cancel
... - ,
21-மார்-202215:06:36 IST Report Abuse
... மண்ட பத்திரம்...
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
21-மார்-202214:07:21 IST Report Abuse
karupanasamy திமுக காரனுங்க கொள்ளை அடிக்குறதுல புடிச்சு கெடக்குறானுங்க மக்கள் இனிமேல் தான் வெறுப்பை காட்டுவார்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அடிமைகளான குருமா, கோவாலு கம்மிஸ் கான் கிராஸ் எல்லோரும் அதிமுகவுக்கு வால் புடிக்க போறாங்க. தீய மு க மண்ணை கவ்வும் நாள் மிக அருகில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X