டில்லியில் இருந்து கிளம்பிய விமானம்; தொழில்நுட்ப கோளாறால் பாக்.,கில் தரையிறக்கம்

Updated : மார் 21, 2022 | Added : மார் 21, 2022 | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் இருந்து தோஹா நோக்கி சென்ற விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.டில்லி விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்கு சுமார் 100 பயணிகளுடன் கத்தார் ஏர்வேசின் விமானமான கியூ.ஆர்.579 விமானம் இன்று (மார்ச் 21) காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசரமாக
Delhi, Doha, Qatar Airways, flight, Diverted, Karachi, Pakistan, டில்லி, கத்தார், விமானம், ஏர்வேஸ், பாகிஸ்தான், கராச்சி, தரையிறக்கம்

புதுடில்லி: டில்லியில் இருந்து தோஹா நோக்கி சென்ற விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டில்லி விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்கு சுமார் 100 பயணிகளுடன் கத்தார் ஏர்வேசின் விமானமான கியூ.ஆர்.579 விமானம் இன்று (மார்ச் 21) காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை டில்லியிலிருந்து தோஹா சென்ற விமானத்தில் சரக்குப் பகுதியிலிருந்து புகை கிளம்பியதால் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டன. அவசரகால சேவைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் பயணிகள் அனைவரும் தோஹா நோக்கி புறப்படுவார்கள். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X