இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம் ; தமிழகம் 'டாப்'

Updated : மார் 22, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் எளிதாக பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம் கொண்டுவரப்பட்டது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தற்போது ஏ.டி.எம் மெஷின்களிலேயே நிறைய
More ATM, Tamilnadu, RBI, Top, ஏடிஎம், தமிழகம், ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா

புதுடில்லி: இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் எளிதாக பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம் கொண்டுவரப்பட்டது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தற்போது ஏ.டி.எம் மெஷின்களிலேயே நிறைய வசதிகள் வந்துவிட்டன. பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் போடுவது, பணம் பரிமாறுவது உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த ஏ.டி.எம் மெஷின்கள் வங்கி அருகில் மட்டுமின்றி, பெரும்பாலான முக்கிய இடங்களிலும் அந்தந்த வங்கிகள் சார்பில் நிறுவப்பட்டுள்ளன.



latest tamil news

இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 டிசம்பர் மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகம் 28,540 ஏ.டி.எம்.,களுடன் அதிக ஏ.டி.எம்.,களை கொண்ட மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. இரண்டாமிடத்தில் மஹாராஷ்டிரா (27,945), மூன்றாமிடத்தில் உத்தரபிரதேசம் (23,460) உள்ளது. கர்நாடகா (19,613), மேற்குவங்கம் (13,565), குஜராத் (12,699), ஆந்திரா (12,357), தெலுங்கானா (11,910), ராஜஸ்தான் (11,296), கேரளா (11,054) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (21)

raja - Cotonou,பெனின்
22-மார்-202211:38:59 IST Report Abuse
raja வங்கிகள் என்றால் மத்திய அரசின் சாதனையாகத்தான் கொள்ளவேண்டும்....
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
21-மார்-202222:39:10 IST Report Abuse
TRUBOAT டிஜிட்டல் இந்தியாவை நோக்கி வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு. மிக நன்று. இது மக்களின் தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சியை / கல்வி அறிவை எடுத்துரைக்கும் ஒரு அளவுகோல்.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202221:50:45 IST Report Abuse
Venugopal S நமது மோடி பக்தர்களுக்கு பாங்க்கிங் பற்றியும் தெரியாது, அடிப்படை பொருளாதார அறிவும் கிடையாது.வாய்க்கு வந்த படி தமிழகத்தையும் தமிழர்களையும் மட்டமாகவும் கேவலமாகவும் பேசும் துரோகிகள் கூட்டம்.
Rate this:
raja - Cotonou,பெனின்
22-மார்-202215:04:05 IST Report Abuse
rajaஆனால் கேடுகெட்ட விடியலின் உடன்பருப்புகளுக்கு விடியல் போலவே கணக்கு என்றால் சுட்டுப்போட்டாலும் தெரியாது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X