பீஜிங்: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கியதாக தெரிகிறது. விமானம் குறித்த உறுதியான தகவல் அரசு தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். பயணிகள் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் கும்மிங் பகுதியிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. விமானம் எரிந்து விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றனர்.

இதனால் விமானத்தில் இருந்த 133 பயணிகள் கதி என்ன என்பது குறித்த விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு சீன மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.