நாடு முழுவதும் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர்

Updated : மார் 22, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 2020-21ம் ஆண்டில் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வருகிறது. லோக்சபாவில் ‛பொது உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்காக இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை மற்றும் காடு
நாடு முழுவதும் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர்

புதுடில்லி: நாடு முழுவதும் 2020-21ம் ஆண்டில் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.



பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வருகிறது. லோக்சபாவில் ‛பொது உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்காக இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை மற்றும் காடு வளர்ப்பின் மூலம் இதுவரை நடப்பட்டுள்ள மரங்கள், அதற்கு செலவினங்கள்' தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்தார். அவர் அளித்த பதில்: பல்வேறு சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளின் படி மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழங்கி வருகின்றன.



latest tamil news


அதன் அடிப்படையில் 2020-2021ம் ஆண்டில் நாடு முழுவதும் பொது திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இடையூறாக இருந்த 30,97,721 மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நாடு முழுவதும் 3,64,87,665 மரங்கள் நடப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.358.87 கோடி செலவாகியுள்ளது. 2020-21ம் ஆண்டில் டில்லியில் ஒரு மரம் கூட வெட்டவில்லை, மாறாக 53 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

ஆக .. - Chennai ,இந்தியா
22-மார்-202206:29:54 IST Report Abuse
ஆக .. நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகளை தண்ணீர் வூற்றி பராமரிக்க சொல்லலாம் ..உருப்படியான வேலை எதுவும் செய்வதில்லை ..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-மார்-202205:06:19 IST Report Abuse
NicoleThomson நீங்க அப்படி சொல்றீங்க ஆனால் நடப்பது என்னவோ செம்மாறி ஆடுகள் தான் அதிகம் வளர்ந்து வருகின்றன அவை வருகிறது என்றாலே புற்களும் மரங்களும் மொட்டைஅடிக்கப்படுகின்றன என்று தான் ஆகிறது
Rate this:
Cancel
21-மார்-202219:10:27 IST Report Abuse
சம்பத் குமார் 1). வரவேற்கத்தக்கது. நல்ல முயற்சியும் கூட இது.2). மரம் நடுதல் மட்டும் போதாது. அதனை பேணிக் காத்து வளர்க்க வேண்டும்.3). அதற்கு ஆங்காங்கே உள்ள‌ இளைஞர்கள், பொதுமக்கள், தொழில் துறையினர் உதவ வேண்டும்.4). முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப தொடர் முயற்சி நமக்கு வெற்றிகரமான மரங்கள் நிறைந்த வனப்பகுதியை கொடுக்கும் என்பது சிறிதளவும் ஐயமில்லை.5). பள்ளி‌ மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இதில் உற்சாகமாக ஊக்கப்படுத்தி இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X