குடும்பம் நடத்த மறுக்கும் பெண் எஸ்ஐ.,; கலெக்டரிடம் கணவர் புகார்

Added : மார் 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பெரம்பலூர்: குடும்பம் நடத்த மறுக்கும் பெண் எஸ்.ஐ., மீது அவரது கணவர் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீ.ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமரன், 53, எனும் நான், கிழக்கு ராஜாபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம்
குடும்பம் நடத்த மறுக்கும் பெண் எஸ்ஐ.,; கலெக்டரிடம் கணவர் புகார்

பெரம்பலூர்: குடும்பம் நடத்த மறுக்கும் பெண் எஸ்.ஐ., மீது அவரது கணவர் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீ.ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமரன், 53, எனும் நான், கிழக்கு ராஜாபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
எனக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வரும், திருச்சி மாவட்டம், நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாயினி, 52, என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி திருமணம் நடந்தது. 2014ம் ஆண்டு வரை இருவரும் ஸ்ரீரங்கம் போலீஸ் குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தோம்.

இதைதொடர்ந்து, தற்போது, திருச்சி பி.டி.சி., பிரிவில் பணியாற்றி வரும் கார்த்திகாயினி என்னுடன் குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் இதற்கு ஆதரவாக உள்ளனர். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது விவாகரத்து வழங்கி உதவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-மார்-202219:48:03 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கூடிய சீக்கிரம் அமரன் மீது பொய்யாக பாலியல் குற்றம் சுமத்தி உள்ளே தள்ளிவிடுவர். காலுக்கு உதவாத செருப்பை கழற்றி எறிய வேண்டியதுதான்
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
21-மார்-202219:35:41 IST Report Abuse
IYER AMBI திருமணம் என்றால், தந்தை தன் மகளுக்கு எந்த உரிமையும் இல்லாமல் எந்த கேள்வியும் கேட்காமல் சம்பாதித்துக்கொடுக்கும் ஒரு வேலைக்காரனை ஏற்படுத்துவது என்பதே தற்கால பெண்களின் எண்ணமாக இருக்கிறது . கணவனை மனிதனாகவாவது மதிக்க பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும். கணவனை அன்பால் மட்டுமே அடிமையாக்க முடியும் . தற்கால பெண்களுக்கு அன்பைத்தவிர மற்றதெல்லாம் ஏராளமாக இருக்கிறது .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மார்-202218:45:38 IST Report Abuse
அசோக்ராஜ் //"அல்லது விவாகரத்து வழங்கி உதவிட வேண்டும்"// விவாகரத்து கலெக்டர் வழங்குவாரா?மனு செய்தவர் பட்டதாரி ஆசிரியர். த்ராவிஷ தேசம் ஐம்பது வருடம் கல்வி வளர்த்த லட்சணம் இப்படி. த்ராவிஷம் வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X