ஆப்கன் நிதியமைச்சராக இருந்தவர் அமெரிக்காவில் டாக்ஸி டிரைவராக பணியாற்றும் பரிதாபம்

Updated : மார் 22, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயிண்டா அமெரிக்காவில் தனியார் வாடகை டாக்ஸி ஓட்டும் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்கு முன்பாக அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக காலித் பயிண்டா செயல்பட்டு வந்தார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நாட்டை
Afghan, Finance Minister, Khalid Payenda, Uber, Driver, US, ஆப்கானிஸ்தான், நிதியமைச்சர், காலித் பயிண்டா, கார் டிரைவர்,

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயிண்டா அமெரிக்காவில் தனியார் வாடகை டாக்ஸி ஓட்டும் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்கு முன்பாக அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக காலித் பயிண்டா செயல்பட்டு வந்தார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நாட்டை கைப்பற்றியதும், அவர்களுக்கு பயந்து அரசு நிர்வாகத்தில் இருந்தவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். அதில் காலித் பயிண்டாவும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். ஒரு நாட்டின் நிதியமைச்சராக இருந்த அவர், அங்கு தன் அன்றாட செலவினங்களுக்காக டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார்.


latest tamil news



இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எனது குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டேன். நாங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஆப்கானிஸ்தான் சீட்டுக்கட்டு சரிந்ததைப் போன்று தலிபான்களிடம் வீழ்ந்து விட்டது. 6 மணி நேரம் கார் ஓட்டி 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம்) சம்பாதித்தேன். அமெரிக்காவில் நானும் எனது குடும்பத்தினரும் ஒன்றாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202209:15:39 IST Report Abuse
அப்புசாமி எதுக்கு பரிதாபம்? ஊபர் டிரைவர்கள் அங்கே சராசரியாக மணிக்கு 37 டாலர்கள் சம்பாதிக்கறாங்களாம். வருஷத்துக்கு சுமார் 50 லட்சம் ரூபாய். இவுரு ஆப்கானில் என்ன மந்தியா இருந்தாலும் அவ்வளவு காசு பாக்கமுடியாது. படத்தைப் பாருங்க. சும்மா கோட், சூட் டை யோட ஜம்மு இருக்காரு. ஆப்காணிஸ்தானத்தில் வெறும் அழுக்கு வேட்டியை தலையில் சுத்திக்கிட்டு தாலிபச்ன் கிட்டேருந்து தினமும் தப்பிக்கப் பாக்கணும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-மார்-202206:27:55 IST Report Abuse
Kasimani Baskaran உழைத்து வாழ வேண்டும் என்ற உத்வேகம் நிச்சயம் பலன் தருகிறது - சிறப்பானதும் கூட.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-மார்-202205:45:36 IST Report Abuse
Matt P வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். பரிதாபப்பட என்ன இருக்கிறது?. 6 மணி நேரம் கார் ஓட்டி 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம்) சம்பாதித்தேன். ஏற்று சொல்கிறார். இங்கே பிறந்து வளரும் பலர் கூட இவரை விட் குறைவாக தான் சம்பாதிக்கிறார்கள் விரைவு உணவு கடைகளில் எல்லாம் மணிநேரத்துக்கு மாநில ச்சட்டப்படி எவ்வளவு குறைந்த வூதியம்ஓ அது தான். எட்டு மணி நேர வேலை. அமெரிக்காவில் பலர் இரண்டு வேலை பார்த்து தான் காலத்தை ஓட்டுகிறார்கள்.நல்ல படிப்பு இல்லையென்றால்,சேமிக்க முடியாது . செலவுக்கு சரியாக இருக்கும். அமெரிக்காவுக்கு வந்தவர்கள் எல்லாம் ஆகா ஓஹோ என்று வாழ்கிறார்கள் என்பது உண்மை அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X