தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல்: தமிழக அரசு

Updated : மார் 22, 2022 | Added : மார் 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுதமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல்: தமிழக அரசு

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூ.36 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கினை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202222:28:07 IST Report Abuse
முருகன் நாளையிலிருந்து ஒரு கடை கூட இயங்காது .
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202220:14:27 IST Report Abuse
Laks Giri 😂😂😂😂😂😂😂😂😂😂😂இங்க அரசுன்னு ஒன்னு இருக்கா?பேச்சு இருக்கு.உடல் உறுப்புகள் செயலிழுந்த நிலைதான்
Rate this:
Cancel
21-மார்-202219:04:16 IST Report Abuse
சம்பத் குமார் 1). நீதிமன்றத்தின் உறுதியான முடிவு வரவேற்கத்தக்கது.2). தமிழக அரசின் முடிவும் வரவேற்கத்தக்கது.3). மக்களாகிய நாம் இதற்கு‌ ஒத்துழைப்பு தரவேண்டும்.4). கடைகள் தயவு செய்து வாடிக்கையாளரிடம் காகித பை அல்லது துணி கொண்டுவர கேட்டு கொள்ள வேண்டும். மக்களும் அவ்வண்ணமே செயல்பட வேண்டும்.5). குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் பாரதம் உருவாக வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X