சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1990ம் ஆண்டு, சட்டசபையில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி (60) என்பவர் வரும் மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், துபாஷியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பணி:
சட்டசபையில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து அவை வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் அவையில் இருக்கும்போது அவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். இதுவே இவரது பணி. இந்த பொறுப்பில் இதுவரை ஆண்களே நியமிக்கப்பட்டிருந்த நிலையில், முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.