தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும்: டி.வி.எஸ்., குழும தலைவர் அறிவுரை

Updated : மார் 23, 2022 | Added : மார் 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,'' என, டி.வி.எஸ்., குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார்.மறைந்த தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழா, கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'அருட்செல்வர் மகாலிங்கம் விருது - 2022' வழங்கும் விழா,
தொழில்நுட்ப அறிவு, டிவிஎஸ், குழும தலைவர், அறிவுரை

கோவை: ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,'' என, டி.வி.எஸ்., குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார்.



மறைந்த தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழா, கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'அருட்செல்வர் மகாலிங்கம் விருது - 2022' வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.



தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும் | டிவிஎஸ் குழும தலைவர் அறிவுரை | TVS Venu Srinivasan | Dinamalar

latest tamil news



விழாவில், தொழில், ஆய்வு, சமூக முன்னேற்ற பங்களிப்புக்காக, டி.வி.எஸ்., குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசனுக்கு விருது வழங்கப்பட்டது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் விருது வழங்கினார்.



வேணு சீனிவாசன் பேசுகையில், ''இன்று தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. ''இதைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பல விஷயங்களை படித்து அறிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் பல உயரங்களை அடைந்தாலும், ஆசிரியர்களை நினைவுகூர வேண்டும்,'' என்றார்.




latest tamil news


விழாவில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 'குமரகுரு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கூட்டணி' எனும் தொழில்நுட்ப மையம் துவக்கப்பட்டது. 'பிரிக்கால்' நிறுவனர் விஜய் மோகன், 'ரூட்ஸ்' குழும தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-மார்-202212:01:31 IST Report Abuse
S.Baliah Seer மாணவர்களின் திறமையை சாகடிப்பவை AICTE ,UGC போன்றவை. இப்போது வெறும் இளநிலை பட்டதாரிகளுக்கு கூட டாக்ட..ர் அதாவது பிஎச்டி பட்டம் தேவையா? அவர்கள் எதைக் கண்டுபிடிக்கிறார்கள்? யுஜிசி- பல்கலைக் கழகங்களுக்குத்தான் GRANTS கொடுக்கவேண்டும். பல்கலைக் கழகங்களிடம் இருந்து பிஎச்டி -க்காக துட்டு பெற அல்ல. எல்லோரும் இந்நாட்டு பிஎச்டி என்ற நிலையை யுஜிசி உருவாக்க முயலுகிறது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202205:59:05 IST Report Abuse
Kasimani Baskaran ஜிடி நாயுடு சாதித்தது ஏறாளம் - ஆனால் அதை நாம் சந்தைப்படுத்தத் தவறிவிட்டோம். மாறாக திராவிடத்தை சந்தைப்படுத்தி படு தோல்வி அடைந்துள்ளோம் என்பது சோகமான விசயம். தமிழகத்தைப் பொருத்தமட்டில் தொழில் என்பது சாராயம் காய்ச்சி விற்பது மற்றும் கல்வி என்ற புனிதத்தை வைத்து ஆர்வமுள்ளோரை கொள்ளையடிப்பதுமேயாகும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202215:08:52 IST Report Abuse
Kasimani Baskaran/////...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X