நில அளவையர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

Added : மார் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் நில அளவை துறையில் நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை 50 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சுப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் நில அளவை துறையில் நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை 50 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சுப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று 23ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களில் நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நில அளவை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
24-மார்-202213:02:33 IST Report Abuse
sangarapandi 2022 மார்ச் மாதம் 23- ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணி அனுபவம் இல்லாதவர்களை பணியில் அமர்த்தினால் நில அளவை பணி சரிவர நடக்காது என்பது அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.தவிர நில அளவை பணி சரிவர நடக்காது. ஏன் என்றால் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அத்து மால் கற்கள் எங்கெல்லாம் இருக்கும் என்பது தெரியும் அதனால் காலதாமதம் இல்லாமல் அளக்க முடியும் என்பதே உண்மையாகும். அதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேசி நல்லமுடிவை அரசு தரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X