பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

Updated : மார் 25, 2022 | Added : மார் 25, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக,
கோவில், மக்கள், போராட்டம்

உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


அதிகாரிகளும், போலீசாரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க, ஒரு கி.மீ., துாரத்திற்கு முன், பிரதான வாயிலை அடைத்து உள்ளே நுழைய விடாமல், பெண்கள், ஆண்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தடுத்தனர். போலீசார் தடியடி நடத்தியும், விலகாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அங்கிருந்த சிலர் கெரசினை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரித்தனர்.

அருகிலிருந்த போலீசார் மீதும் கெரசின் விழுந்ததால், தீயணைப்பு துறை வாகனத்தால் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, அதிகாரிகளும், போலீசாரும் முயன்றும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து, திருப்பூர் எஸ்.பி., சசாங் சாய், ஆர்.டி.ஓ., கீதா ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர்.

இதில், ஏப்., 10 வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இடிப்பு நடவடிக்கையை தவிர்த்து கொள்ள அறிவுரை வழங்கினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பிச்சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
25-மார்-202214:20:40 IST Report Abuse
Ramesh M பொதுவாக பழைய காலங்களில் கோவில்கள் ஆற்றங்கரையில் குளக்கரையில் தான் கட்டுவார்கள். வழித்தடத்தில் கட்டமாட்டார்கள். இந்த அறிவு எங்கள் முன்னோருக்கு உண்டு. கரையோரம் இருப்பதை வழித்தடத்தில் இருப்பதாக வழக்கு பதிந்திருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. வழித்தடம் என்றால் தானே இடிக்கமுடியும் என்ற காரணமாக இருக்கும். எனவே கோர்ட்டும் இடிக்கும் முன் தீர விசாரித்து செயல்படவேண்டும்.ஒருவரை தூக்கில் போட்டதற்கு அப்புறம் விசாரிக்கமால் முன்பே சரியாக விசாரித்தபின்பு தான் தூக்கில் ஒருவரை போடப்படும். அப்படியிருக்க கோவில் விஷயத்திலும் அவ்வாறே செயல் படவேண்டும்.இடித்தபின் விசாரித்து பயன் இல்லை.அது ஒருதலைப்பட்சமானது.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-மார்-202214:10:58 IST Report Abuse
சீனி டாஸ்மாக் பார் நடத்துறவன் அமைச்சர், கோயில் சிலையை பாதுகாப்பவருக்கு ஜெயில், இதுதான் விடியலின் சாதனை.
Rate this:
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
27-மார்-202209:10:42 IST Report Abuse
மிளிர்வன்''நச்ச்''...
Rate this:
Cancel
25-மார்-202213:44:39 IST Report Abuse
உஷா வாசுதேவன் திக கும்பலின் தலைவர் வெளி நாடு நழுவும் பொது தெரியும் கலைஞர் ஈ வே ராவின் ஆத்ம திருப்திக்காக கோயில் இடிக்கப் படும் என்று தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அல்லது யோகி ஜி ஆட்சி வரவேண்டும் விட்டால் பழங்கால கோயில் பழங்கால வழிபாட்டு மத ஸ்தலங்களையும் இடிப்பார்களா நல்ல ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X