உ.பி.,யில் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் யோகி

Updated : மார் 26, 2022 | Added : மார் 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உ.பி., சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்த லில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை
uttarpradesh, yogiadithyanath, யோகி, யோகி ஆதித்யநாத், பதவியேற்பு, உபி,

லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உ.பி., சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்த லில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பா.ஜ., மேலிடம் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.


உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று, 2வது முறைஆட்சி அமைத்தது. லக்னோவில் நடந்த விழாவில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழாவில் 50,000க்கு அதிகமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

latest tamil news



தொடர்ந்து லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.
பின்னர்
சுரேஷ்குமார் கண்ணா
சூர்யா பிரதாப் ஷாஹி
சுவந்திர தேவ் சிங்
பேபி ராணி மவுரியா
சவுத்ரி லஷ்மி நாராயணன்
ஜெய்வீர் சிங்
தரம்பால் சிங்
நந்தகோபால் குப்தா
பூபேந்திர சிங் சவுத்ரி
அனில் ராஜ்பர்
ஜிதின் பிரசாதா
ராகேஷ் ஷச்சான்
அரவிந்த் குமார் ஷர்மா
யோகேந்திர உபாத்யாய்
ஆஷிஷ் படேல்
சஞ்சய் நிஷாத் ஆகியோர் அமைச்சர்களாகவும்

நிதின் அகர்வால்
அனில் அகர்வால்
சந்தீப் சிங்
ரவிந்திர ஜெயிஸ்வால்
குலாப் தேவி
கிரிஷ் யாதவ்
தரம்வீர் பிரஜாபதி
அசிம் அருண்
ஜேபிஎஸ் ரத்தோர்
தயாசங்கர் சிங்
நரேந்திர கஷ்யப்
அருண்குமார் சக்சேனா
உள்ளிட்டோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் நட்டா, குஜராத், ஹரியானா, உத்தர்கண்ட் கோவா மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.யோகி பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-மார்-202211:36:55 IST Report Abuse
sankar ரொம்ப இன்டெலிஜெண்ட் முதல்வர்ன்னு பார்த்தாலே தெரியுதே.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மார்-202205:26:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ராகு கேது பெயர்ச்சி. உ.பியை இன்னொரு ஐந்து வருஷம் கவ்வுகிறது, ஹா ஹா..
Rate this:
Cancel
25-மார்-202217:41:23 IST Report Abuse
ருத்ரா வாழ்த்துக்கள் ஜி எப்போதும் தாங்களே தொடரவேண்டும்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மார்-202205:27:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உபிஸ் மேலே இம்புட்டு காண்டா ஒங்களுக்கு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X