முதல்வர் பயணம் குறித்து அவதூறு; அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்| Dinamalar

முதல்வர் பயணம் குறித்து அவதூறு; அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்

Updated : மார் 27, 2022 | Added : மார் 26, 2022 | கருத்துகள் (67) | |
சென்னை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த பயணம் குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க
annamalai, bjp, dmk, stalin, dubai


சென்னை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த பயணம் குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி அவருக்கு திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி அனுப்பிய நோட்டீசில் கூறியுள்ளதாவது : முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022 ல் கலந்து கொண்டதை கொச்சைபடுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளீர்கள்.


latest tamil news




முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது. அதன் நோக்கம் அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.100 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X