இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்?| Dinamalar

இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்?

Updated : மார் 27, 2022 | Added : மார் 26, 2022 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக வெளியான தகவல்: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா வரும் ஏப்., 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். 2ம் தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். 2021 ல் நேபாள பிரதமரான பின்னர் அவர், முதல்முறையாக வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள
nepal, india, Prime Minister, Nepal, Sher Bahadur Deuba

புதுடில்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இது தொடர்பாக வெளியான தகவல்: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா வரும் ஏப்., 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். 2ம் தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். 2021 ல் நேபாள பிரதமரான பின்னர் அவர், முதல்முறையாக வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.


latest tamil news




இரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கு இந்த பயணம் உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X