கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: மூடி மறைக்க முயற்சிக்கிறதா போலீஸ்?

Added : மார் 27, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
ராமநாதபுரம்: விருதுநகர் கல்லுாரி மாணவி, ரவுடி கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போலீசார் மூடி, மறைக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, காதலனுடன் மார்ச் 23ல், மூக்கையூர் கடற்கரைக்கு சென்றார்.காதலர்களை நோட்டமிட்ட ஐந்து ரவுடிகள், மறைவான இடத்தில் காதலனை தாக்கி, மாணவியின்
கல்லூரி மாணவி, கூட்டு பலாத்காரம், போலீஸ்?

ராமநாதபுரம்: விருதுநகர் கல்லுாரி மாணவி, ரவுடி கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போலீசார் மூடி, மறைக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, காதலனுடன் மார்ச் 23ல், மூக்கையூர் கடற்கரைக்கு சென்றார்.காதலர்களை நோட்டமிட்ட ஐந்து ரவுடிகள், மறைவான இடத்தில் காதலனை தாக்கி, மாணவியின் துப்பட்டாவால் அவரது கைகளை கட்டிப்போட்டு, காதலன் கண்முன் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.மாணவியின் மொபைல் போன், மாணவரின் பிரேஸ்லெட் உள்ளிட்டவற்றையும், அந்த கும்பல் பறித்து தப்பினர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த காதலன் விஷம் குடித்தார். மாணவி விருதுநகர் எஸ்.பி., மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மயில்வாகனனிடம் புகார் அளித்தார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரவுடிகளை பிடிக்க சென்ற போது, போலீசாரை, ரவுடிகள் அரிவாளால் வெட்டினர். கமுதி, வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், 24, திருச்சுழி அருகே நத்தகுளத்தைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கு, 23, ரவுடி அஜீத், 24, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பலாத்காரம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதியவில்லை. ஆயுதம் வைத்திருந்ததாகவும், அலைபேசி திருடியதாகவும் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது. பலாத்காரத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக, போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil newsவிருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்காரம் சம்பவத்தை அடுத்து, இந்த சம்பவமும் வெளியானால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அதை மூடி, மறைக்க போலீசார் இவ்வாறு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Chennai,இந்தியா
27-மார்-202223:17:50 IST Report Abuse
Rajasekaran This is the state of law and order in the State that prides in adoring itself as Peaceful Park in the entire country If instead of a voiceless girl , it was a VIP’s daughter, will there be any lethargy or attempt to cover up ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-மார்-202221:19:06 IST Report Abuse
vbs manian சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-மார்-202221:04:40 IST Report Abuse
r.sundaram இதை எல்லாம் கண்டுகொள்ள கூடாது. பைசா வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும். தட்டிக்கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது. ஒட்டு போட்டவர்கள் அனுபவியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X