சசிகலாவை அதிமுக.,வில் சேர்க்க வாய்ப்பில்லை: பழனிசாமி

Updated : மார் 27, 2022 | Added : மார் 27, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சேலம்: சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறினார்.அதிமுக சேலம் புறநகர் மாவட்ட உட்கட்சி தேர்தலை கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துவக்கி வைத்தார் .பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம்
அதிமுக, சசிகலா, பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, admk, sasikala, palanisamym edapadi palanisamy

சேலம்: சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறினார்.

அதிமுக சேலம் புறநகர் மாவட்ட உட்கட்சி தேர்தலை கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துவக்கி வைத்தார் .


பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஸ்டாலின் குடும்பம் துபாய்க்கு சுற்றுலா


latest tamil news




தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நான் வெளிநாடு பயணம் செல்லும்போது துறை அமைச்சர் செயலர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.

விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்த பின்பு ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அமுல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடக்கிறது. அது குறித்து தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட கருத்தை கூறக்கூடாது.

அ.தி.மு.க.,வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. சசிகலா பற்றிய ஓ.பி.எஸ்., கருத்து தனிப்பட்டது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில் தான் வேறுபாடு உள்ளது. சசிகலா குறித்து ஊடகங்களில் தான் கேள்வி கேட்கப்படுகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்டது. திரும்ப, திரும்ப கேட்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-மார்-202208:41:46 IST Report Abuse
Matt P சும்மா கட்சியில சேருங்கப்பா....,அவங்க சிறைக்கு போனாங்க ...உங்க நல்ல நேரம் சிறைக்கு போகலை அது தான் வித்தியாசம் . அவங்க , தலைமைக்கு கட்சி வழக்கப்படி தகுதியானவங்க தான். ...ஸ்டாலின் மட்டும் தலைவராக முதல்வராக இருக்கலையா? ..கருணாநிதி இருக்கலையா? கனிமொழி இருக்கலையா? ஏன் ஜெயலலிதா கூட சிறைக்கு போகலையா? /..ப . சிதம்பரம் இன்னும் வெள்ளை வேட்டி கட்டி கொண்டு தானே திரிகிறார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-மார்-202201:15:20 IST Report Abuse
Vena Suna வாய்ப்பே இல்லை ராஜா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-மார்-202215:35:16 IST Report Abuse
Sampath Kumar இன்னும் கொஞ்ச நாளில் உங்களை கட்சில இருந்து தூக்க போறாங்க அப்புறம் புரியும் ரோம்ப நாளைக்கு செகண்ட் பிடல் வாசிக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X