ஸ்டாலின் துபாய் பயணத்திற்கு விமானக் கட்டணம் ரூ.1 கோடி

Updated : மார் 28, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
'முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு பயணித்த தனி விமானத்திற்கு, 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இரு வழி போக்குவரத்திற்கு, 1 கோடி ரூாய் வரை கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது' என, தனி விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். தமிழகத்திற்கு, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நான்கு நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 24ம் தேதி

'முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு பயணித்த தனி விமானத்திற்கு, 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இரு வழி போக்குவரத்திற்கு, 1 கோடி ரூாய் வரை கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது' என, தனி விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.latest tamil newsதமிழகத்திற்கு, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நான்கு நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 24ம் தேதி துபாய் சென்றார். 22 பேர் பயணம்அவருடன், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீ சன், பேரன்கள் இன்பன் உதயநிதி, கிரிஷ் கந்தன், பேத்தி தன்மயா உதயநிதி. மருமகள் கிருத்திகா உதயநிதி, உதவியாளர் தினேஷ்குமார், செயலர்கள் உதயசந்திரன், சண்முகம், அனு ஜார்ஜ், உமாநாத் சென்றுள்ளனர்

.மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் கிருஷ்ணன், தொழில்வழிகாட்டி நிறுவன தலைமை செயலர் அதிகாரி பூஜா குல்கர்னி, தி.மு.க., தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பார்த்திபன் உட்பட, மொத்தம் 22 பேர் வரை துபாய் சென்றுள்ளனர்.இதில், உதயநிதி, சபரீசன் உள்ளிட்ட சிலர், ஸ்டாலினுடன் செல்லாமல், முன்னதாகவே தனியாக துபாய் சென்றுவிட்டனர்.

மைத்திரி விமான நிறுவனத்தின், 'எம்பிரேயர் லீனேஜ் 1000' என்ற விமானத்தில், ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினரும் துபாய் சென்றனர். இந்த விமானத்தில், இரண்டு விமான ஓட்டிகள் மற்றும் அதிகபட்சமாக 19 பேர் பயணிக்கலாம்.இதில், படுக்கையறை, குளியலறை உட்பட, பல்வேறு பிரத்யேக வசதிகள் உள்ளன. இந்த விமானத்தில் பயணிக்க, ஒரு மணி நேரத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வரை அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதுகுறித்து, தனியார் விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:இருக்கை வசதியைப் பொறுத்து, ஒவ்வொரு தனி விமானத்தின் கட்டணங்களும் வேறுபடும். பால்கான், பினோம், லீயர்ஜெட், அஸ்ட்ரா எஸ்.பி., போயிங் பிசினஸ் ஜெட் என, தனி விமான சேவையில் பல ரகங்கள் உள்ளன.இதில், நான்கு பேர் பயணிக்கக் கூடிய விமானத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1.85 லட்சம் ரூபாய் அடிப்படைக் கட்டணம். எத்தனை பேர் என்பதற்கேற்ப கட்டணம் மாறுபடும். இதுவே, 50 பேர் வரை பயணிக்கும் விமானத்திற்கு 17.50 லட்சம் ரூபாய் கட்டணம். இந்த அடிப்படை கட்டணம், விமான வகைகளுக்கு ஏற்ப மாறுபடும்.


latest tamil news


மேற்கூறிய அனைத்தும், ஒரு மணி நேரத்திற்கான அடிப்படைக் கட்டணம் மட்டுமே. இத்துடன், விமான நிலையங்களில் புறப்பாடு மற்றும் தரையிங்குவதற்கான கட்டணம், விமானத்தை நிறுத்துவதற்கான கட்டணம் உட்பட இதர கட்டணங்களும் உண்டு.40 லட்சம் ரூபாய்முதல்வர் ஸ்டாலின் பயணித்ததாகக் கூறப்படும் விமானத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

இத்துடன், இதரக் கட்டணங்கள் இணையும் போது, சென்னையில் இருந்து துபாய் செல்ல 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இது ஒரு வழி பயணத்திற்கான கட்டணம்.இது தவிர, துபாயில் விமானத்தை நிறுத்துவதற்கான கட்டணம், மீண்டும் அங்கிருந்து சென்னை வருவதற்கான கட்டணம் என, அதிக பட்சம் 1 கோடி ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.இவை, அனைத்தும் தோராய கட்டண விபரம் மட்டுமே. ஒவ்வொரு விமான சேவை நிறுவனங்களைப் பொறுத்தும், கட்டணங்கள் மாறுபடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
04-ஏப்-202200:05:04 IST Report Abuse
N Annamalai எவ்வளவு பேர் கேலி பேச தயார் ஆக உள்ளார்கள் .மற்ற முந்தய ஆட்சியாளர்களை விட இது பரவாயில்லை
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
29-மார்-202218:46:00 IST Report Abuse
Viswam முதலீடு ஈர்க்கவா? அள்ளின பணத்தை முதலீடு செய்ய போனமாதிரி நியூஸ் கசியுது
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
30-மார்-202210:51:54 IST Report Abuse
raghavanதுபாய் போயிட்டு, ஈர்க்க போனாரோ இல்லை ஈச்சை மரத்தடியில் தூங்கினாரோ இன்னும் நாலு வருஷத்துக்கு ஒரு பய கேள்வி கேக்க முடியாது....
Rate this:
Cancel
Ramanujan - Nagercoil,இந்தியா
29-மார்-202213:12:44 IST Report Abuse
Ramanujan இன்னும் 1 வருடம் கழித்து மறக்காமல் கேளுங்கள். எதனை கோடி முதலீடு வந்தது என்று. என்னென்ன கம்பெனிகள் என்று. சாயம் வெளுத்து விடும். நான் அபுதாபியில் 22 வருடம் வேலை பார்த்தவன். அங்கு பெரிய முதலீடு செய்ய கூடிய தமிழர் யாரையும் கேள்வி பட்டதே இல்லை. லூலூ குழுமத்தின் முதலாளி ஒரு மலையாளி. பார்க்கலாம், கேரளாவினர் விடுவார்களா என்று. மந்திரி சொல்கிறார். விமானத்தில் போதுமான இடம் இல்லயாம்,அதனால்தான் தனி விமானம். ஒரு மாதத்திற்கு முன் புக் செய்தால் எதனை சீட் வேண்டுமானாலும் கிடைக்கும். பிசினஸ் கிளாஸ் சீட் போதாதா, இன்னும் பெரிய இடம் வேண்டுமா? சிந்திக்கும் மக்கள் இந்த நாட்டில் குறைவு. அதனால்தான் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X