துபாய் பயணம் நாட்டுக்கா, வீட்டுக்கா? ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி!

Updated : மார் 28, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (63) | |
Advertisement
ஓமலுார்-''முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம், தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை தொடங்கவா?'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல், ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கால்நடை பூங்காகட்சியினருக்கு விண்ணப்பங்களை வழங்கி, துவக்கி வைத்த

ஓமலுார்-''முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம், தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை தொடங்கவா?'' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.latest tamil news


சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல், ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கால்நடை பூங்காகட்சியினருக்கு விண்ணப்பங்களை வழங்கி, துவக்கி வைத்த பழனிசாமி அளித்த பேட்டி:தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின், துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன், துறை அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றது சரி; ஆனால், குடும்பத்தினர் ஏன் செல்ல வேண்டும்? இதை, குடும்ப சுற்றுலா வாக மக்கள் பார்க்கின்றனர்.

அங்கு சென்றது, தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா, குடும்பத்துக்கு முதலீட்டை தொடங்கவா என, மக்கள் கேள்வி கேட்கின்றனர். கடந்த 2021 அக்டோபரில் துவங்கிய சர்வதேச கண்காட்சி, சில நாளில் முடியவுள்ள நிலையில், தமிழகம் சார்பில் அரங்கு தொடங்கியது வேடிக்கை. இதை சாக்காக வைத்து துபாய் சென்றுள்ளார்.நான் வெளிநாடு சென்ற போது, பயணியர் விமானத்தில் சென்றேன். துறை அமைச்சர்கள், செயலர்கள் மட்டும் வந்தனர். லண்டன் சென்றபோது, நம் ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம்.

'கிங்ஸ்' மருத்துவமனை போன்று, தமிழக மருத்துவமனைகளை மாற்ற ஆலோசனை நடந்தது. அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் மட்டும் உடனிருந்தனர்.அப்போது, அமைச்சர்களுடன் நான் சுற்றுலா சென்றதாக அவதுாறு கூறிய ஸ்டாலின், இப்போது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

ஆக்கப்பூர்வ திட்டங்களை கொண்டு வர வேண்டியே நாங்கள் சென்றோம். அதன்படி ஆசியாவில் மிகப் பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசலில் கொண்டு வரப்பட்டது. தற்போதைய துபாய் கண்காட்சியில் கூட, அ.தி.மு.க., அரசில் மேற்கொண்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கடந்த, 10 மாதங்களில் தமிழகத்தில் புது திட்டம், தொழில்கள் கொண்டு வரப்படவில்லை


latest tamil news


. 'எக்ஸ்பிரஸ் வே'விருதுநகர் பாலியல் சம்பவத்தில், அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சி.பி.ஐ., விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் ஆதரவு தெரிவிக்கிறார்.அரசு தலைமை செயலர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.மூச்சுக்கு 300 முறை, ஜனநாயகத்தை பற்றி பேசும் தி.மு.க., தற்போது இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலையை எதிர்த்த ஸ்டாலின், A'எக்ஸ்பிரஸ் வே' என பெயர் மாற்றி கொண்டு வர முயற்சிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202217:56:23 IST Report Abuse
Nathan திமுகவின் கருப்பு பணம் சூப்பர் மார்க்கெட் மூலம் முதலீடாக தமிழகம் திரும்பி வரும்
Rate this:
Cancel
Manivasagam - Chennai,இந்தியா
28-மார்-202217:33:28 IST Report Abuse
Manivasagam அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையை ஏற்றி மக்களை .....
Rate this:
Cancel
Manivasagam - Chennai,இந்தியா
28-மார்-202217:32:40 IST Report Abuse
Manivasagam பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலையை ஏற்றியது போதாது என்று அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையை ஏற்றி தை கேட்கமாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X