பஸ்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் மக்கள் பாதிப்பு| Dinamalar

பஸ்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் மக்கள் பாதிப்பு

Updated : மார் 29, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (52) | |
புதுடில்லி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும் மொத்த 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தம் தமிழகத்தில் 67 % பஸ்கள் இயங்கவில்லை. இந்த நிலையில்,

புதுடில்லி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும் மொத்த 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தம் தமிழகத்தில் 67 % பஸ்கள் இயங்கவில்லை. இந்த நிலையில், நாளை (மார்ச் 29) 60 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என தொமுச நிர்வாகிகள் தெரிவித்தனர்.




latest tamil news


சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும் ( மார்ச்: 28 ) நாளையும் (மார்ச்:2() பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்பட வில்லை. பஸ்கள் சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னையிலும் நகரப் பேருந்துகள் சரிவர இயங்காததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.



latest tamil news


வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்படுவதால் ஷே ர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


திருப்பூர், கோவை, நீலகிரியில் மொத்தம் 980 பஸ்களில் 162 பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன.



திருப்பூரில் 20 சதவீத அரசு பஸ் மட்டும் இயக்கம்


திருப்பூர் மண்டலத்தில் உள்ள, 559 பஸ்களில், தற்போது வரை, 62 பஸ்களே பணிமனையை விட்டு வெளியேறி இயக்கத்துக்கு வந்துள்ளது.

பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் இயங்கவில்லை.


பொள்ளாச்சி அரசு போக்குவரத்துக் கழக மூன்று கிளைகளின்,190 பஸ்களில், 15 பஸ்கள் மட்டுமே இயக்கம்.


நீலகிரியில், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று தொழிற்சங்கங்கள் அறிவித்த ஸ்டிரைக்கையொட்டி, 40 பஸ்கள் இயக்கத்தில் உள்ளது. பெரும்பாலான வழித்தடத்தில் பஸ்கள் இயங்கவில்லை.




கேரளா அரசு பஸ்கள் இல்லை


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆறு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. கேரளாவில் இருந்தும் நீலகிரிக்கு கேரளா அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால், கர்நாடகா அரசு பஸ்கள், வழக்கம்போல் நீலகிரிக்கு இயக்கப்பட்டது.


ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தும் ஊழியர்கள் பலர் ஸ்டிரகை்கில் ஈடுபட்டுள்ளனர்.



தூத்துக்குடி துறைமுக பரபரப்பு


பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த சரக்கு கப்பல்களில் காற்றாலை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த கப்பலை மரைன் பைலட் கப்பலை வெளியே அனுப்ப கயிறு எடுத்துவிடும் தொழிலாளர்களிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் இன்று வேலை நிறுத்தம் என்பதால் வேலை செய்யமாட்டோம் என்றனர்.



இதனை தொடர்ந்து தொழிற் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்க்கு வந்தனர் . பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது 2 தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.



நாளை பேருந்துகள் இயக்கம்


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொமுச நிர்வாகி நடராஜன் கூறுகையில், ‛பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (மார்ச் 29) 60 சதவீதம் பஸ்கள் இயக்க ஒத்துழைப்பு வழங்கப்படும். முன்னணி நிர்வாகிகள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். மற்ற தொழிலாளர்கள் பணிக்குச் செல்வார்கள். அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X