முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது: அமைச்சர் விளக்கம்

Updated : மார் 28, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (216) | |
Advertisement
சென்னை : ''முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,'' என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தகுந்த நேரத்தில் விமான வசதிகள்
MK Stalin, Stalin, DMK

சென்னை : ''முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,'' என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தகுந்த நேரத்தில் விமான வசதிகள் கிடைக்காததால் முதல்வர் பயணத்திற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.தனி விமான பயண செலவுகளை தி.மு.க., தலைமை ஏற்றுள்ளது. முதல்வரின் பயணத்திற்கு அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை.


latest tamil news


முதல்வரின் இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல; கடைக்கோடி தமிழகத்தில் இருந்து துபாய் சென்று, உழைத்து கொண்டிருக்கும் தமிழர்களின் வளம், வாழ்விற்கானது. உலக வர்த்தக கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.கண்காட்சி துவங்கும் நேரத்தை விட முடியும் நேரத்தில் மிகப்பெரிய கூட்டம் வருகிறது.

உலகின் பல பகுதிகளில் இருந்து பலரும் தற்போது வந்துள்ளனர். எனவே இதுதான் சரியான நேரம் என்பதால் முதல்வர் இங்கு வந்துள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எத்தனை கோடி ரூபாய் முதலீடாக வந்தது என்பது அவருக்கே தெரியும். இதுகுறித்து நான் சட்டசபையில் பேசியுள்ளேன். ஆனால் முதல்வரின் சுற்றுப் பயணத்தால் மூன்று நாட்களில் 6000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.


latest tamil news


அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்தது. விருதுநகர் பாலியல் வழக்கு தொடர்பாக தெளிவான விளக்கத்தை சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 60 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிற்கே முன்னுதாரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என முதல்வர் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கு குறித்து தேவையற்ற கருத்துக்களை பழனிசாமி தெரிவிக்க வேண்டாம். முதல்வருக்கு கிடைக்கும் புகழ், வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாமல், பழனிசாமி புழுதியை இறைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (216)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202211:37:52 IST Report Abuse
Matt P பல விமரிசநங்களுக்கு பிறகு, அதுவும் திருப்பி வந்தபிறகு திமுக ஏற்று கொண்டது என்றால், சமாளிப்பு என்று தான் எடுத்து கொள்ள முடியும். முதல்வராயிருந்து கொண்டு எளிமையாக தனி விமானம் இல்லாமல் போய் வந்திருக்க வேண்டும். நாட்டின் ஏழை எளியவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு உண்மையாக வாழ்ந்து காட்ட வேண்டும். காந்தி காமராஜர் [போல வாழ தேவையில்லை அது உங்களால் முடியவும் முடியாது. கருணாநிதி போலவாவது ஆட்சியில் இருந்து கொண்டு வாழும் வாழ்க்கை இல்லாமல் இருக்கட்டும்.
Rate this:
Cancel
Santhosh Kumar - Chennai,இந்தியா
01-ஏப்-202222:06:37 IST Report Abuse
Santhosh Kumar 6000 கோடி சென்னையிலிருந்து துபாய் சென்று மீண்டும் சென்னைக்கே வெள்ளையாக முதலீடாக வந்திருக்கிறது என்பதனையும் அமைச்சர் சொல்லி இருக்கலாம் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 4, 5 குட்டிகளை துபாய்க்கு அழைத்து சென்றது, சுற்றிப் பார்க்கவா ? இல்லை தலா ஒரு ஆயிரம் கோடி முதலீடு என்ற பெயரில் கொண்டு வரவா? ஏனெனில் மூன்று நாட்களில் துபாயை சுற்றிப்பார்பது என்பது மிகவும் கடினம். பல முறை சென்றே ஒரு சில இடங்களைத்தான் பார்க்க முடிந்தது. அதுவும் குழந்தைகள் ??? மேலும் எதிர்ப்பு பிறந்த பின் திமுக செலவு என்று சொல்ல என்ன காரணம்? மேலும் பழனிச்சாமி எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார் என்று கேள்வி வேறு? அவர் ஆண்ட பொழுது கொள்ளையடிக்கவில்லை என்பதுதான் அவர் முதலீடு ஒன்றும் கொண்டு வரவில்லை என்பதன் அர்த்தம்.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
30-மார்-202211:04:42 IST Report Abuse
Ramalingam Shanmugam குடும்பம் போன போது ஆன செலவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X