தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Updated : மார் 29, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுக்கோட்டை: குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் மருதான்மலை கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் லீலாவதியை, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து மகன் சந்தோஷ் குமார் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
தாய் கொலை, மகன், சிறை, 40 ஆண்டுகள், தீர்ப்பு

புதுக்கோட்டை: குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மருதான்மலை கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் லீலாவதியை, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து மகன் சந்தோஷ் குமார் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன.


latest tamil news


இந்த நிலையில், இன்று (மார்ச் 28) இவ்வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகன் சந்தோஷ் குமாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்தார். மேலும், தவறை உணரும் வகையில் 3 மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
28-மார்-202222:15:33 IST Report Abuse
THINAKAREN KARAMANI 40 ஆண்டுகள் சிறை தண்டனை எல்லாம் இவனுக்கு போதாது. இவன் எந்த விதத்திலும் தன் தவறை உணரப்போவது இல்லை. சாப்பாடு போன்ற பிரச்சனைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மறுபடியும் 'குடி'க்கு எவனிடமாவது தகராறு செய்து கொண்டு காலத்தை ஓட்டுவான். தண்டனை மிகக்கடுமையாக இருந்தால்தான் இதுமாதிரி தவறு செய்யக்கூடாது என்ற பயம் மற்றவர்களுக்கு வரும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-மார்-202220:07:01 IST Report Abuse
NicoleThomson அந்த பணத்தை வாங்கிய டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் தண்டனை கொடுக்கப்படவேண்டும்?
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
28-மார்-202219:14:39 IST Report Abuse
Soumya புரூடா விடியலின் அடுத்த தேர்தல் வாக்குறுதி தாய்மார்களை பாதுகாக்க ஓசிகோட்டர் கொத்தடிமைங்களுக்கு தினமும் இலவச கோட்டர் ஊத்தப்படும் வாழ்க புரூடா விடியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X