நம்பிக்கையில்லா தீர்மானம்  :பார்லி.,யில் 31ல் ஓட்டெடுப்பு?
நம்பிக்கையில்லா தீர்மானம் :பார்லி.,யில் 31ல் ஓட்டெடுப்பு?

நம்பிக்கையில்லா தீர்மானம் :பார்லி.,யில் 31ல் ஓட்டெடுப்பு?

Updated : மார் 29, 2022 | Added : மார் 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இஸ்லாமாபாத் :நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, 31ல் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், அவர் சில கட்சிகளுடன் கூட்டணி
நம்பிக்கையில்லா தீர்மானம்  :பார்லி.,யில் 31ல் ஓட்டெடுப்பு?


இஸ்லாமாபாத் :நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, 31ல் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், அவர் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.



latest tamil news


அதற்குப் பின் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கு, 'இம்ரான் கானின் கொள்கைகளே காரணம்' என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதையடுத்து, இம்ரான் கானுக்கு எதிராக, அவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதாக அறிவித்தன.

இதற்கிடையே, கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்த கட்சி எம்.பி.,க்கள் சிலரும் இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதனால், அவர் பதவியில் நீடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், இம்ரானுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான ஓட்டெடுப்பு நேற்று நடந்தது.

மொத்தமுள்ள எம்.பி.,க்களில், 20 சதவீதம் பேர், அதாவது 68 பேரின் ஆதரவு இருந்தால் இந்தத் தீர்மானம் நிறைவேறும். அதே நேரத்தில், தீர்மானத்துக்கு ஆதரவாக, 161 பேர் ஓட்டளித்தனர்.

இதையடுத்து, நாளை மறுதினம் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும்.

அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.

ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், தீர்மானத்தை ஏற்பதற்கான ஓட்டெடுப்பில், 161 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதனால், இம்ரான் கான் பதவியில் நீடிப்பது இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Chakkaravarthi Sk - chennai,இந்தியா
29-மார்-202215:54:28 IST Report Abuse
Chakkaravarthi Sk வந்த பணத்தை எல்லாம் பக்கத்து வீட்டுக்காரனை அழிக்க வேண்டி மந்திர வாதியிடம் அழுதாது போல தீவிரவாதிகளுக்கு செலவு செய்தால் இப்படி நடக்கும். சர்வே ஜனோ சுஃஹினோ பாவந்து என்றால் உலகில் உள்ள அனைவரின் நலத்தையும் வேண்டுவது. அது போன்ற இறை நம்பிக்கை உள்ள கலாச்சாரம் இந்தியாவுடையது. அதனாலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி எல்லாருக்கும் அளிக்க முடிந்தது. இலங்கை உஹவி கேட்கும் பொழுது வட்டி கொடு என்று கேட்காமல் அளந்து உதவி கொடுக்கும் நிலையில் நம் நாடு இருக்கிறது. பாரீர் பாரீர் தெற்கு ஆசியாவை பாரீர். இலங்கையில் விலைவாசி விண்ணை தாண்டி வருகிறது. பாகிஸ்தானிலும் அப்படியே. மியான்மரில் ராணுவ ஆட்சி. வங்க தேசத்திற்கு நாம் உதவி செய்கிறோம். ஆப்கானிஸ்தானுக்கு டன் கணக்கில் கோதுமை உணவை அல்லி கொடுக்கிறோம். இந்தியாவா என்ன என்று எல்லோருக்கும் பெருமை தானே. ஆனால் நமது பட்டத்து இளவரசர்கள் மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி இந்தியா வீழ வேண்டும் என்று ஆசை படுகிறர்கள். கொரோனாவுக்கு எப்படியாவது அமெரிக்கா அல்லது இஐரோப்பிய மருந்து கம்பெனிகளிடம் இருந்து மருந்து வாங்க துடித்தார்கள். ஒரு கும்பல் மேலே சென்று சீனாவை பார் பார் பார் என்று பாட்டு பாடினார்கள் சீனாவில் கோரோவை ஒழித்து விட்டார்கள் என்று டுபாக்கூர் தனமாக பேசினார்கள். இப்பொழுது என்ன நடக்கிறது என்று கண்ணில் படவில்லையா? மோடியை எதிர்ப்பது ஒன்றே கருத்து என்று இந்தியில் உள்ள அனைத்து மருத்துவ துறையினரையும் விஞ்ஞானிகளையும் தேசபக்தர்களையும் கேவலப்படுத்தினார்களே இந்த அரசியல் வியாபாரிகள் எங்கே இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-மார்-202222:44:08 IST Report Abuse
மலரின் மகள் இம்ரான் கான் அவர்களுக்கு ஓரளவிற்கு பெட்டெர். விதியை யாரால் மாற்ற முடியும். நிதி நெருக்கடி விலைவாசி உயர்வுக்கு இம்ரானா காரணாம்? பஜ்வா போனார் பணம் எப்படியும் கடன் பெற்று வந்துவிடுவேன் என்று, இளவரசரை பார்க்கமுடிந்ததா? உம்ரா செய்துவிட்டு தனிப்பட்ட முறையில் வந்ததாக நினைத்து கொண்டு திரும்பிவிட வைத்தார்கள். கைநிறைய கடன் வாங்கி வருவார் என்றால், உம்ராவிற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. சீனா பாகிஸ்தானை க்ரெயிலிருந்து தப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ளும். பழைய தலைகள் எல்லாம் நாட்டை சுரண்டி பிரிட்டனிலும் கனடாவிலும் அமேரிக்காவில் சில வ கு தேசங்களிலும் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொண்டார்கள். இப்போது பாகிஸ்தானில் நிலம் மட்டுமே இருக்கிறது, அதையும் சீனன் அபகரித்து கொள்ள வந்துவிட்டான். இனி அவர்கள் பெயரை மட்டும் வைத்து கொண்டு உலகம் முழுதும் அந்த பெயர் ஒன்றே போதுமென்று இருந்துவிடவேண்டியது தான். ஒரு தேசம் ஸ்ரீஅப்பகை இருக்கவேண்டும் என்றால் முதலில் உள்நாட்டில் குழப்பம் இருக்கக்கூடாது, அதற்கு ஏற்றத்தாலுவகளை காட்டக்கூடாது, அடுத்து அண்டைய தேசங்களுடன் நட்பு பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டும் இல்லையென்றால் அந்த தேசம் நிலைக்காது. அது போற தேசதத்தை சீனன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறான். கொஞ்சகாலங்களில் பெயரை மாற்றுவான் பாருங்கள் பாக்க்ஷியாங் என்று பாகிஸ்தானை. அது சிங்சியாங் மாகாணத்தின் ஒருபகுதி என்பான்.
Rate this:
Cancel
Venkat Subbarao - Chennai,இந்தியா
28-மார்-202219:12:03 IST Report Abuse
Venkat Subbarao ம்ம்ம்ம் பாகிஸ்தானின் தலைவிதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X