குறி தப்பாத 'சாகோ' துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

Updated : மார் 29, 2022 | Added : மார் 29, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, 'சாகோ ஸ்னைப்பர்' என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.தொலைநோக்கி உதவியால், வெகு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடுவதற்கு, 'ஸ்னைப்பர்' துப்பாக்கிகள் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சாகோ நிறுவனம், அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளை
 குறி தப்பாத 'சாகோ' துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, 'சாகோ ஸ்னைப்பர்' என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.தொலைநோக்கி உதவியால், வெகு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடுவதற்கு, 'ஸ்னைப்பர்' துப்பாக்கிகள் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சாகோ நிறுவனம், அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.இந்நிறுவனத்திடம் இருந்து, 'சாகோ 338 டி.ஆர்.ஜி. - 42' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை, இந்திய ராணுவம் இறக்குமதி செய்துள்ளது. இவை, ஜம்மு - காஷ்மீர் எல்லை, சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு ஆகிய இடங்களில் பணியில் உள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளன.latest tamil news

இது குறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:1990களில், ரஷ்யாவிடம் இருந்து 'டிரகுநோவ்ஸ்' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை இந்தியா வாங்கியது. இதை விட மேம்பட்ட 'பெரட்டா, பர்ரட்' வகை ஸ்னைப்பர்கள், 2019, 2020ல் அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.தற்போது, இவற்றை விட மேம்பட்ட சாகோ ஸ்னைப்பர்கள், ராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்றன. 6 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா, 1,500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கி வீழ்த்த வல்லது.சமீப ஆண்டுகளாக, இந்திய எல்லைப் பகுதிகளில், ஸ்னைப்பர் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பின்லாந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் பயிற்சி பெற, 10 ராணுவத்தினர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

பைரவர் சம்பத் குமார் 1). ஒரு நாட்டின் வலிமை மூன்று விஷயங்களில் அடங்கி உள்ளது.2). முதலாவது சீரான பொருளாதார வளர்ச்சி. நிச்சியமாக நாம் இதில் இந்தியா சிறந்து உள்ளோம். 3). கொரானோவின் பாதிப்பிலிருந்து அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் மீள முடியாமல் அதளபாதாளத்தில் உள்ளது நமது கண்கூடான நிகழ்வு.4). இராண்டாவது வலிமையான இராணுவம். இன்று ரஷ்யா, அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக நான்காவது இராணுவ பலம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.5). மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த வழி நடத்தி செல்ல இந்தியாவிருந்து ஒரு திறமையான உலகத் தலைவராக திரு நரேந்திர மோடி அவர்கள் உள்ளார்.6). நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான எல்லா உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவது சாலச்சிறந்தது. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-202220:23:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இதெல்லாம் பகாசுரன் வரம் மாதிரி. கருமம், இது தப்பான கைக்கு மாறிச்சீன்னா எங்கேருந்து சுட்டான்னு கூட சொல்லமுடியாது. இனிமேல் மேடை மேலே ஏறி பேசணும்ன்னாலே புல்லட் ப்ரூஃப் கூண்டுக்குள்ளே இருந்து தான் பேசணும் ....
Rate this:
Cancel
nmurgesh - Bangalore,இந்தியா
29-மார்-202211:49:58 IST Report Abuse
nmurgesh .......
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
29-மார்-202211:44:44 IST Report Abuse
S.Baliah Seer ஒரு ஆயுதத்தின் திறன் அதனை பிரயோகிக்கும் மனிதனின் திறமையைப் பொறுத்தே வெளிப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X