பா.ஜ.,வை எதிர்க்க ஒன்றிணையுங்கள்; பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா கடிதம்

Updated : மார் 30, 2022 | Added : மார் 29, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.,வை எதிர்த்து போராட ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.2024 லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு
Mamata Banerjee, Writes, Opposition Leaders, Against BJP, TMC, மம்தா பானர்ஜி, பாஜக, எதிர்க்கட்சிகள், ஒன்றிணையுங்கள், கடிதம்

புதுடில்லி: பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.,வை எதிர்த்து போராட ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பா.ஜ.க நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை தொடர்ந்து பலமுறை தாக்கி வருகிறது. இப்போது இந்த அடக்குமுறை ஆட்சியை நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது.


latest tamil news


அமலாக்கத்துறை, சிபிஐ, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்திய அரசு தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் இந்த மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.,வை எதிர்த்து நாம் போராட வேண்டும். இந்த பா.ஜ.,வின் அடக்குமுறையை ஒழிக்க வேண்டும். எனவே, அனைவரும் இதுகுறித்து ஆலோசிக்க ஒரு கூட்டத்துக்கு ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
01-ஏப்-202213:23:47 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மொதல்ல நீங்களும் உங்க தோழமை கூட்டமும் தொண்டனை பெரிய பதவிக்கு கொண்டு வாங்க ..உங்க பொது எதிரி கட்சியில் சாதாரண உண்மையான உழைப்பாளி பெரிய பெரிய பதவிகளில் உலர் ..ஆனால் குடும்ப முன்னேற்ற மட்டுமே உள்ளதால் ஒன்னும் செய்ய முடியாது அசைக்கவோ ஆடவோ முடியாது ..ஜனநாயக கட்சியாக உழைப்புக்கு மதிப்பு கொடுப்பவர்கள் தான் உங்க பொது எதிரி ..புரிஞ்சிச்சா
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-மார்-202204:41:18 IST Report Abuse
Ramesh Sargam ஒன்றிணையுங்கள் - இதிலிருந்தே தெரிகிறது, இந்த நரிக்கூட்டங்களுக்கு, சிங்கத்தை எதிர்க்க தில் இல்லை என்று. அந்த பயம் இருக்கணும்.
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
30-மார்-202203:13:40 IST Report Abuse
மிளிர்வன் எங்கள் சேப்பாக்கம் செகுவாரா உதைண்ணா தலைமையின் கீழ் அணிவகுக்க ரெடியா..? இல்லாட்டி நடைய கட்டு பீகம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X