நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் தர்ணா

Added : மார் 30, 2022 | |
Advertisement
திண்டிவனம், : திண்டிவனம் அருகே நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர்.திண்டிவனம் அடுத்த கொள்ளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பின் படி, பயனாளிகளுக்கு நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதில் கொள்ளார், சாலை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சிலருக்கு தள்ளுபடி பட்டியலில்

திண்டிவனம், : திண்டிவனம் அருகே நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர்.திண்டிவனம் அடுத்த கொள்ளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பின் படி, பயனாளிகளுக்கு நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இதில் கொள்ளார், சாலை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சிலருக்கு தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லை. பாதிக்கப்பட்ட பிரபாகரன், விஜய்பிரதீபமா, காமாட்சி உள்ளிட்ட சிலர், நேற்று காலை 10:45 மணியளவில், கொள்ளார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே தங்கள் பெயர் இல்லை என கூறி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து சங்க செயலாளரிடம் கேட்ட போது, 'கடன் தள்ளுபடிக்காக சங்கம் சார்பில் 298 பெயர்கள் கொண்ட பட்டியல் அனுப்பபட்டது. இதில் 60 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தில் 40 கிராமிற்கு கீழ் நகைகளை வைத்த ஒருவருக்கு மட்டும் தான் தள்ளுபடி கிடக்கும். இரண்டு பேர் வைத்திருந்தால் கடன் தள்ளுபடி கிடைக்காது' என்றார்.அதனைத் தொடர்ந்து 30 நிமிடத்திற்குப் பிறகு அவர்களாகவே கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X