அரசு பஸ் டிரைவருக்கு மூன்று மாதம் சிறை

Added : மார் 30, 2022 | |
Advertisement
கடலுார், : பைக்கில் சென்றவர் மீது விபத்து ஏற்படுத்திய வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு கடலுார் கோர்ட்டில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர், 43; இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜன., 7ம் தேதி, பைக்கில் பண்ருட்டி- கடலுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். மேல்பட்டாம்பாக்கம் அருகில் வந்த போது, கடலுாரில் இருந்து விழுப்புரம் சென்ற

கடலுார், : பைக்கில் சென்றவர் மீது விபத்து ஏற்படுத்திய வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு கடலுார் கோர்ட்டில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர், 43; இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜன., 7ம் தேதி, பைக்கில் பண்ருட்டி- கடலுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். மேல்பட்டாம்பாக்கம் அருகில் வந்த போது, கடலுாரில் இருந்து விழுப்புரம் சென்ற டி.என்.32.என்-3687 எண்ணுள்ள அரசு பஸ், சங்கர் மீது மோதியது. இதில், அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அரசு பஸ் டிரைவர் மாளிகைமேடு அடுத்த எஸ்.கே.,பாளையம் சம்பத், 43; என்பவரை கைது செய்து, கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் -1ல் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி சிவபழனி, குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் சம்பத்திற்கு 3 மாதம் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X