பிரியாணி கடையில் மாமூலுக்காக மல்லுக்கட்டிய திமுக.,வினர்; கட்சிக்கு ‛தலைவலி'

Updated : மார் 30, 2022 | Added : மார் 30, 2022 | கருத்துகள் (54) | |
Advertisement
திருநீர்மலை: சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்திய திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளர் தினேஷ், திமுக உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திமுக.,விற்கு தலைவலியை ஏற்புடுத்திய நிலையில், கட்சியினருக்கு அறிவுரைகள் வரலாம் எனுக் கூறப்படுகிறது.பல்லாவரம்-, திருநீர்மலை சாலை, சுப்புராய
பிரியாணி, திமுக, கைது, சிசிடிவி,

திருநீர்மலை: சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்திய திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளர் தினேஷ், திமுக உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திமுக.,விற்கு தலைவலியை ஏற்புடுத்திய நிலையில், கட்சியினருக்கு அறிவுரைகள் வரலாம் எனுக் கூறப்படுகிறது.

பல்லாவரம்-, திருநீர்மலை சாலை, சுப்புராய நகரில், முகமது ஹனீஸ், 32, என்பவர், டீ மற்றும் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சங்கர் நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான, திருநீர்மலை, சிவராஜ் தெருவைச் சேர்ந்த சுகுமார், 32, சுப்புராய நகரைச் சேர்ந்த தினேஷ், 38, ஆகிய இருவர், முகமது ஹனீசின் கடைக்கு சென்று, மாமூல் கேட்டுள்ளனர்.

தினேஷ், தாம்பரம் மாநகராட்சியின், 31வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலரான சித்ரா முரளிதரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைக்காரர் மாமூல் தர மறுத்ததால், ஆத்திரமடைந்தவர்கள் செங்கல்லை எடுத்து கடை கண்ணாடியை உடைத்தனர். பின், 'எப்படி இங்கு வியாபாரம் செய்கிறாய் என்று பார்ப்போம்' என்றும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த சங்கர் நகர் போலீசார், சுகுமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும், நேற்று காலை கைது செய்தனர். சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news




இந்த சம்பவம் கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது . திமுக.,வினர் அடிக்கடி இதுபோல் ஓசி சாப்பாட்டிற்காக அடிதடியில் இறங்குவதை எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்னையாக பேசுவார்களே என்று கட்சி அஞ்சுகிறது. இதையடுத்து, கட்சியினருக்கு சில அறிவுரைகள் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
31-மார்-202210:52:59 IST Report Abuse
sankar எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் பாரத ரத்னா எம்ஜீயார் ஹோட்டலில் சப்பிடுவிட்டு காசு தராமல் எஸ்கேப் ஆகிவிடுவார். அந்த தவறான திராவிட மாடலை சின்சியராக பின்பற்றி திராவிடக் கட்சிக்காரர்கள் வீரம் காட்டுகிறார்கள்.
Rate this:
raja - Cotonou,பெனின்
31-மார்-202211:46:01 IST Report Abuse
rajaபின்னாடியே வந்த இன்னொரு எம் கி ஆர் அந்த பணத்தை கொடுத்துடுவாரே அதை பார்க்கலையா.... உன் தேவைக்கேற்ப உண்மைகளை மறைத்து விடுவாய் அப்படித்தானே.. ஓஹோ இதுதான் திராவிட மாடலா......
Rate this:
Cancel
Abi - Reno,யூ.எஸ்.ஏ
30-மார்-202223:22:31 IST Report Abuse
Abi தமிழ் நாட்டில் மிக விரைவில் கவர்னர் ஆட்சி வர வேண்டும். நிலைமை மோசமாக உள்ளது.
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202223:20:27 IST Report Abuse
Susil Kumar விடியல் வந்து ஒரு வருடம் ஆகப்போகுது, இப்பவே அழுதா எப்படி, இன்னும் நாலு வருஷம் இருக்கு, நல்லா வேணும், வோட்டு போட்டேங்கள்ல, நல்ல வேணும். இவர்கள் எந்தளவு அநியாயம் செய்கிரார்களோ அவ்வளவு நல்லது பிஜேபிக்கு , அப்போதானே உள்ளே வரமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X