பெங்களூரு:சட்டசபை தேர்தலில், ஆளும், பா.ஜ.,வுக்கு தக்க பதிலடி கொடுக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 10 முதல், மூன்று நாட்கள் கூட்டம் நடத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது. நாளை கர்நாடகாவுக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தை துவங்கி வைக்க வாய்ப்புள்ளது.மற்றொரு பக்கம், காங்கிரசும் கூட தேர்தல் திட்டங்கள் வகுக்க, ஏப்ரல் 10 முதல் மூன்று நாட்கள் கூட்டம் நடத்த, தயாராகி வருகிறது.
பெங்களூரு எலஹங்கா அருகிலுள்ள ஓட்டலில் நடக்கும் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட, பலரும் பங்கேற்பர்.காங்கிரஸ் எந்தெந்த விஷயங்களை, முன் வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்க்கொள்வது, பிரசாரம், வேட்பாளர்கள் தேர்வு என, பல விஷயங்கள் குறித்தும், ஆலோசனை நடத்தப்படுகிறது.
காங்கிரஸ் மேலிட தலைவர் ராகுல், இன்று பெங்களூரு வருகை தருகிறார். இவரும் மூத்த தலைவர்களுடன், கூட்டம் நடத்துவார். இரண்டாவது நாள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுடன் கூட்டம் நடத்துவார் என, கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.