2024 -ல் மதசார்பற்றபுதிய அரசு அமைவதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது என மதுரையில் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மதுரையில் நடைபெற்று வரும் மா.கம்யூ., பொது கூட்டத்தில் சீதாராம் பேசியதாவது: 2024 தேர்தலுக்கு முன் புதிய அணி உருவாகி மத்தியில் புதிய ஆட்சி அமையும். மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதற்காக பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களை ஸ்டாலின் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். பா.ஜ.,விற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் . இவ்வாறுசீதாராம் யெச்சூரி கூறினார்.