ஆபிசர்கள் யாருமே சரியில்லை!முனிசி, கூட்டத்தில் ஆபிசர்கள் யாருமே சரியில்லை. ஒருத்தரும் ஒழுங்கா வேலையே செய்வதில்லை என்பதையே பெருசா நகராட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டிட்டு வராங்க.இதில், ஹெல்த் இன்ஸ்பெக்டரான பெண் ஆபிசர் இடம் மாற தயாராக இருக்கிறார். ஆளைவிட்டா போதும்னு காத்திருக்கிறாராம். 'அரசியல்வாதிகள் தொல்லையும் புரோக்கர்களின் பாதிப்பும் தாங்க முடியல சாமி...'ன்னு வருத்தத்தில் இருக்காராம்.
கொரோனா நேரத்தில் ஓய்வின்றி உழைத்ததை பெருமையா பேசா விட்டாலும் பரவாயில்லை. வீணா அவதுாறு பரப்புறாங்களேன்னு எந்த முடிவை எடுத்தாலும் வரவேற்க காத்திருக்கிறாராம்!
காணாமல் போகுது கழிப்பறைகள்!
ஆ.பேட்டையில் நகராட்சி கழிப்பறைகள் இடித்து, அதை சிலர் ஆக்ரமித்து கடைகளாக கட்டிக் கொண்டதாக சிலர் அங்கலாய்க்கிறாங்க. கோல்டன் சிட்டியில் ஏற்கனவே துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டாமலேயே பணத்தை கொள்ளை யடிச்சாங்கன்னு புகார் இருக்குது. ரா.பேட்டை மார்க்கெட் டின் மேற்கு பகுதியில் முன் இரண்டு சிறு நீர் கழிப்பறை இருந்ததே. அவற்றை கடைகளாக மாத்திக்கிட்டாங்க. கழிப்பறை என்பதால் யாரும் கண்டுக்க மாட்டாங்கன்னு திருடுறாங்களே... இதை சட்டம் சும்மா வேடிக்கை பார்க்கலாமா?
இதுதான் மக்கள் நலனோ?
நகராட்சி பகுதியின் பொதுமக்கள் தண்ணீர் தட்டுபாட்டால் அவதிப்படுவதை தடுக்க திட்டமிட்டு போர்வெல் ஏற்படுத்துறாங்க.ஒரு வார்டில் ஏற்படுத்த வேண்டிய போர்வெலை, நகராட்சி பகுதியை கடந்து கிராம பஞ்சாயத்து பகுதியில், வார்டு உறுப்பினருக்கு சொந்தமான வயல் நிலத்தில் அவர் போர்வெல் ஏற்படுத்தி இருக்கிறார்னு தெரிய வந்திருக்கு.இதுவும் நுாதன திருட்டு. இது பேர்ல கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேணும்னு முனிசி கூட்டத்தில் ஒருத்தர் வலியுறுத்தினார்.
'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்; தம் மக்கள் நலம் என்றே தான் மனதில் கொள்ளுவார்' என்பதன் அர்த்தம் இதுதானோ?எல்லாமே எலக் ஷன் ஸ்டண்ட்!சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால், ஓய்வில் இருந்த 'மாஜி' பூக்கார அசம்பிளிகாரர் தன் பிரசாரத்தை பவர் காட்டி தொடங்கி இருக்கிறார்.
எம் பெருமான் கோவிலின், 'கோல்டன் சாரட்' திருவிழாவில் அவரின் ஆட்டமும் பாட்டும் இன்னும் எதிரொலிக்குது. இதுக்காக வைக்கப்பட்ட 'டிஜிட்டல்' பேனர்கள் விவகாரம், சர்வ கட்சிகள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்க வைச்சிருக்கு. பிரசன்ட் ச.ம.உ., பேனருக்கு தடைப் போடும் முனிசி மாஜிக்கென்ன அப்படியொரு மதிப்பு?
சென்ட்ரலும் ஸ்டேட்டும் எங்களதுன்னு ஆபிசர்களை மிரள வைத்து எல்லாமே தமக்கு சாதகமா ஆக்குவதற்கு எதிர்ப்பு வலுவாக்கி விட்டது. ஆயினும் இல்லாத ஊர்ல இளுப்பம் பூ சர்க்கரை போல கோல்டு சிட்டி ஜனங்களுக்கு வேலை வாய்ப்பு என்ற சர்க்கரையாக, 10 ஆயிரம் பேர் வேலை செய்கிற பேக்டரி ஒண்ணு ரெடி ஆக்கி வருகிறாராம். இதுவொண்ணே பூக்கார மாஜிக்கு வெற்றிக்கு அடித்தளம்னு ஆதரவாளர்களின் ஆசையாக உள்ளது!