27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு..

Updated : மார் 31, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்ன-தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், 6,000 கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இச்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள்

சென்ன-தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், 6,000 கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப் பட்டுள்ளன.latest tamil news


இச்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 27 சுங்கச் சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு பட்டியலில், திண்டிவனம் - ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி,மாத்துார், நல்லுார், நாங்குனேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை - வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளில், 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது


latest tamil news


. சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள மாத்துார், வானகரம், சூரப்பட்டு; அதையொட்டிய பரனுார், நல்லுார், ஸ்ரீபெரும்புதுார், எஸ்.வி.புரம், பட்டரை பெரும்புதுார் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, வாகன உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிதி நெருக்கடியில் தள்ளாடும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புஉள்ளது.

'தமிழகத்தில், 60 கி.மீ., இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்' என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார். அதன்படி, 16 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டிய பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
31-மார்-202211:34:20 IST Report Abuse
Narayanan தமிழக முதலவர் ஸ்டாலின் சென்னையில் இரண்டு மூன்று சுங்கச்சாவடிகளை நீக்கியதுபோல் தமிழக முதல்வர் என்ற கதியில் அனைத்து தமிழக சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நீக்கலாமே
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
31-மார்-202210:38:10 IST Report Abuse
Muthuraj Richard கோவை எல் & டீ பைபாஸ் கிட்ட தட்ட முப்பது வருஷங்களாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது சாலை போட ஆன செலவு நூறு மடங்காக வசூலிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வசூல் நிறுத்தப் படவில்லை பாரதிய ஜனதா ஆட்சி சாமானியரை பொருட்படுத்துவதே இல்லை பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்குகிறது சாலி மேம்பாடு அரசின் கடமை, உள்கட்டமைப்புகள் அரசின் கடமை ஆனால் செலவுகளை சாமானியரின் தலையில் சுமத்துவது எல்லா அரசின் வாடிக்கை ஆகிவிட்டது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சாமானியன் படும் பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31-மார்-202207:48:52 IST Report Abuse
Ramesh Sargam உடனே ஒரு கும்பல் இந்த கட்டண உயர்வை எதிர்த்து போராட கிளம்பிவிடும். ஆனால், தமிழக அரசு உயர்த்திய பால் விலை, மின்சார கட்டண உயர்வு, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மறந்துவிடும். என்ன ஜென்மங்களோ...? அட டாஸ்மாக் விலை ஏற்றியபோது கூட ஒன்றும் எதிர்க்கவில்லை இந்த ரூ.200 கும்பல்...???
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
31-மார்-202210:13:42 IST Report Abuse
Yokiyanஎன்னங்க செய்றது. ஒன்றிய அரசு ரூ2 கும்பல் இருக்கிற மாதிரி மாநில அரசுக்கு ரூ 200 கும்பல். இதுல வெளிநாட்டுல இருந்துகிட்டு தேசபற்று சொல்லி குடுக்கிற கும்பல் வேற. எல்லாம் தலையெழுத்து....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X