ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க போராட்டம்

Updated : மார் 31, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றினால் போதாது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர், ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரானார். அமைச்சரான பின் சிலமுறை மட்டுமே தொகுதிக்கு மட்டுமே வந்து சென்றார்.
Rajakannappan, DMK, TN Minister

ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றினால் போதாது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர், ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரானார். அமைச்சரான பின் சிலமுறை மட்டுமே தொகுதிக்கு மட்டுமே வந்து சென்றார். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வருவதில்லை.முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் பி.டி.ஓ., ராஜேந்திரனை சிவகங்கையில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.


latest tamil news
இலாகா மாற்றம் தி.மு.க.,வின் பித்தலாட்டம்


கே.மகேஸ்வரன், தேவேந்திர குல வேளாளர் சங்க அமைப்பான மருத நில இளைஞர் சங்க தலைவர், பூசேரி, முதுகுளத்துார்: பி.டி.ஓ., ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி, சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட சம்மதிக்காததால் ராஜகண்ணப்பன் மிரட்டியுள்ளார்.

சமூக நீதிக்காக போராடுகிறோம். சமூக நீதியை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என்று கூறும் தி.மு.க., அரசில் உள்ள அமைச்சரே ஜாதி வன்மத்தோடு பேசியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும். இலாகா மாற்றம் என்பது மக்களை திசை திருப்பும் தி.மு.க., அரசின் பித்தலாட்ட வேலை.அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்


க.பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆதிதமிழர் கட்சி, ராமநாதபுரம்: அமைச்சரின் செயலை ஆதி தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி உறுதிமொழி ஏற்ற அமைச்சர். நாங்கள் சொல்வதை கேட்கமாட்டாயா. உன்னை பணிமாற்றம் செய்வேன் என்று மிரட்டியது சட்டவிரோதம்.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று தினமும் முதல்வர் பேட்டியளிக்கிறார்.ஆனால் அமைச்சரே இப்படி நடக்கலாமா. குற்றச்சாட்டு வந்த பின் விசாரணை நடத்தி அறிக்கை பெறும் வரை அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
31-மார்-202213:43:15 IST Report Abuse
raja ஒரு மாட்டுக்காரன் வயலில் இரங்கி விவசாயம் பார்க்கும் விவசாயியை இப்படி கேக்கிறான்.. அவனுக்கு தெரியலை அந்த விவசாயி இல்லைன்னா அவனுக்கும் அவன் மாட்டுக்கும் உணவு இல்லையென்று..
Rate this:
Cancel
31-மார்-202213:25:47 IST Report Abuse
ஆரூர் ரங் என்னவோ மற்ற மந்திரி, மாவட்ட செயலாளர் எல்லோரும் பட்டியலினத்தாரை மதிப்பது போலவும் கண்ணப்பன் மட்டுமே திட்டுவது போலவும் செய்தி போடக் கூடாது. அவர்கள் என்ன அமைச்சரவையிலும் மாவட்ட செயலாளர் வட்டச் செயலாளர் பதவிகளில் இடஒதுக்கீடு😉 கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் களா? நீங்கள் எல்லாம் பொதுத் தொகுதி கேட்கலாமா ?.தகுதி இருக்கிறதா என்று தலைவரே கேட்டு வெளியேற்றி அனுப்பியது வரலாறு
Rate this:
Cancel
Rahul -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202212:23:48 IST Report Abuse
Rahul ஜெ. காலத்தில் கொள்ளை அடித்ததை பிடுங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X