முறைக்கும் மாணவர்கள்... அலறும் ஆசிரியர்கள்

Updated : மார் 31, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
கோவை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது. பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். குறிப்பாக,

கோவை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது. பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். குறிப்பாக, ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, அறிவியல் பூர்வமாக தீர்வை நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை முடிப்பதிலும், கல்வித்துறை தரும் பாடத்திட்டத்தை சாராத பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே, ஆசிரியர்களின் கடமையாக தொடர்கிறது.latest tamil news
மாணவர்களை உளவியல் ரீதியாக எப்படி வழிநடத்த வேண்டுமென்ற ஆலோசனை, ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. இதேபோல், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனைகள் மூலம், அறம் சார்ந்த வாழ்வியல் குறித்து, அறிந்து கொள்ளும் வாய்ப்பை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டியது, கட்டாயம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

மனநல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், ''பாடத்திட்டத்தில் மனநலனிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உளவியல் ஆலோசனை மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில், இதை வழங்குவது கல்வித்துறையின் பொறுப்பு. கண்டிப்பு மிகுந்தாலும், குறைந்தாலும் ஆரோக்கியமான தலைமுறை உருவாவது கேள்விக்குறியே.
நன்னெறி வகுப்புகள் இல்லாததால், தான் செய்வது தவறு என்பதை உணருவதற்கு கூட, சிறார்கள் தயாராக இருப்பதில்லை. உடல், மன ஆரோக்கியம் மேம்படுத்தாமல், கல்வி மட்டும் அளிப்பதால் பலனில்லை.

உளவியல் ஆலோசனை வழங்காததும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம். ஆசிரியர்-மாணவர் உறவை வலுப்படுத்த, கல்வித்துறை சில ஆக்கப்பூர்வ மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்,'' என்றார்.
latest tamil news

இதோ இரு மாத மிரட்டல் பட்டியல்!


கடந்த இரு மாதங்களில் மட்டும், தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களின் பட்டியல் இதோ!

சம்பவம் 1: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, மாணவர்கள் கேலி செய்து, எழுந்து நடனமாடியதாக வீடியோ வெளியானது.
சம்பவம் 2: கரூர் மாவட்டம், தோகைமலை, அரசு மேல்நிலைப்பள்ளியில், முடிவெட்டி வருமாறு கூறிய ஆசிரியரை, சினிமா பாணியில் ஊர்க்காரர்களை அழைத்து வந்து, மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் 3: இந்த சர்ச்சை அடங்கி முடிவதற்குள், தேனி மாவட்டம், ஆத்துார் அருகே, மஞ்சினி அரசுப்பள்ளியில், தலைமையாசிரியரை மாணவர் ஒருவர் மிரட்டி, நாற்காலிகளை உடைத்தது போன்ற வீடியோ வெளியானது.
சம்பவம் 4: உச்சக்கட்டமாக, தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு' என ஆசிரியரையே மிரட்டுவது போன்ற வீடியோ வெளியானது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
31-மார்-202217:54:46 IST Report Abuse
sridhar கடந்த ஐம்பது வருடங்களில் நாம் உருவாக்கிய ஆசிரியர்கள் யார் , அவர்கள் நடத்தை எப்படி இருக்கு . மாணவர்கள் எந்த ஒழுக்கத்தை , சித்தாந்தத்தை கடை பிடிக்கிறார்கள் என்று பார்த்தால் விடை கிடைத்து விடும். மாணவர்கள் / மாணவிகள் எட்டாம் ஒன்பதாம் வகுப்பு வரும் போதே ஒழுக்கம் கெடுகிறது . போலி திராவிடம் சுதந்திரம் என்ற பெயரில் அருவெறுப்பு கலாச்சாரத்தை பரப்புகிறார்கள் .
Rate this:
Cancel
31-மார்-202216:27:39 IST Report Abuse
ஆரூர் ரங் வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பளத்துக்கு ஆசைப்படும்போது எந்த ஆபத்தையும் 😝எதிர்பார்த்து இருக்க வேண்டும். திராவிட ஆட்சி என்றால் இப்படித்தான் என்பது தெரியாமலா வேலைக்கு வந்தீர்கள்?
Rate this:
Cancel
KayD -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202216:26:48 IST Report Abuse
KayD Christian convents la படிச்ச most of the students ku discipline னா என்ன nu தெரியும். Ippo convent education vendaam nu solra vip எல்லாம் அங்க படிச்ச ஆளுங்க தான் அவுங்க பிள்ளைகள் அங்க தான் படிச்சவங்க but grandchildren aa control um panna முடியல ego naala ஏண்டா கான்வென்ட் la சேர்க்க la nu உள்ள polambi கிட்டு irukaa ஆள் தான் அதிகம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X