'கள்ளப் போதகரே வஞ்சிக்காதே'; மத போதகருக்கு எதிராக கிறிஸ்தவர்கள் முற்றுகை

Updated : மார் 31, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர், ராமையா காலனி, ஏ.ஜி., சர்ச் போதகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுபான்மையினர் ஆணைய தலைவரை, கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் குறித்தும், தேவைகள் குறித்தும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கலந்தாய்வு நடத்தியது.
மத போதகர், புகார், கிறிஸ்தவர்கள், முற்றுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : திருப்பூர், ராமையா காலனி, ஏ.ஜி., சர்ச் போதகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுபான்மையினர் ஆணைய தலைவரை, கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் குறித்தும், தேவைகள் குறித்தும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கலந்தாய்வு நடத்தியது. அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தனர். திருப்பூர், ராமையா காலனி, ஏ.ஜி., சர்ச் போதகர் பரமானந்தம் மீது புகார் இருப்பதால், அவரை மாற்ற வேண்டுமென, சர்ச் உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். 'கடந்த இரு வாரமாக, சர்ச் பூட்டி வைக்கப்பட்டுள்ளது; இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

போதகர் பரமானந்தத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பதாகைகளை ஏந்தியபடி, சிறுபான்மையின ஆணையரை, கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து கேட்டறிந்த, அமைச்சர், ஆணைய தலைவர் ஆகியோர், 'ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருவதால், விசாரணை முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, மனுவை பெற்றுக்கொண்டனர்.


latest tamil news





தள்ளுமுள்ளு


இந்நிலையில், ஏ.ஜி., சர்ச் போதகர் பரமானந்தம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே, இருதரப்புக்கும், வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போதகரின் ஆதரவாளர்கள் தங்களை தாக்க தயாராக இருப்பதாகவும், பாதுகாப்பு தேவையெனவும் மறுதரப்பினர் போலீஸ் துணை கமிஷனர் ரவியிடம், கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31-மார்-202222:31:58 IST Report Abuse
Ramesh Sargam இதே கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மத போதகர் (பாதகர்) ஒருவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அது கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று தெனாவட்டாக பேசினார். இன்று அவர்களுக்குள்ளேயே பிரச்சினை, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். எல்லாம் கர்மா - காலம் செய்யும் கோலம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
31-மார்-202222:17:57 IST Report Abuse
r.sundaram மதபோதகரா, குண்டர்கள் தலைவரா?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
31-மார்-202219:49:57 IST Report Abuse
jagan தசமபாகம் பங்கு பிரிப்பதில் சண்டை. ஆட்டு மந்தைகள் வழக்கம் போல் தங்கள் சந்தாவை கட்டிவிட்டு போகவும். இந்த பிசினஸில் பங்கு கேட்கக்கூடாது என்று அதிகாரம் 24 வசனம் 7 ல் சொல்லப்பட்டுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X