பைக்கில் விர்ரென பறந்த இளைஞருக்கு 'வார்டு பாய்' தண்டனை

Updated : ஏப் 01, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு, சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருமாதம் ‛வார்டு பாய்' ஆக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த கடந்த 21ம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதில், பிரவீன் ஜாமின் கோரி சென்னை
Bike Race, ChennaiHC, Bail, பைக் ரேஸ்,இளைஞர் கைது, சென்னை, உயர்நீதிமன்றம், நிபந்தனை ஜாமின், வார்டு பாய்

சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு, சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருமாதம் ‛வார்டு பாய்' ஆக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த கடந்த 21ம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதில், பிரவீன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதி, சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மாதம் உதவியாளராக (வார்டு பாய்யாக) பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.


பைக் ரேஸ் இளைஞர் வார்டு பாய் ஆகிறார்! ஐகோர்ட் நூதன தண்டனை

latest tamil news



அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலத்திற்கு பணியாற்ற வேண்டும் என்றும், வார்டு உதவியாளராக பணியாற்றும் அனுபவம் குறித்து மருத்துவமனை முதல்வருக்கு தினசரி அறிக்கை சமர்பிக்கவும், ஒரு மாத கால பணி முடிந்ததும், பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வரும் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பைக்கில் அதிவேகமாக ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்துவதுடன் இதுபோன்ற தண்டனையால் இனி மனம் திருந்த வாய்ப்புள்ளதாகவும் பலரும் நீதிபதியின் உத்தரவை வரவேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202212:03:56 IST Report Abuse
kulandai kannan சீட்டாஸ்???
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-ஏப்-202205:09:40 IST Report Abuse
Ramesh Sargam வார்டு பாய் வேலையைவிட்டு, பிணவறையில் முதலில் வேலை செய்ய சொல்லி இருக்கவேண்டும். நீதிபதி, கொஞ்சம் யோசித்து அந்த முடிவை எடுத்திருக்கவேண்டும். தவறி விட்டார்.
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
01-ஏப்-202210:24:52 IST Report Abuse
சீனிகரெக்ட். நாலு ஆக்சிடண்ட் பாடிய தூக்கவெச்சா, பைக்க வித்துடுவான் ரேஸிங் மைனர் குஞ்சு......
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஏப்-202204:15:33 IST Report Abuse
Bhaskaran சென்னையில் இதேபோல் நூற்றுக்கணக்கில் ஆட்கள் உள்ளனர் இவர்களை அனைத்துபொதுமருத்துவமனைகளின் கழிவறைகளை ஒருமணி நேரம் சுத்தம் செய்ய விட்டால் போதும் ஜென்மத்துக்கு வேகமாகபோகமாட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X