பிரதமர் மோடி உடனான சந்திப்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Updated : மார் 31, 2022 | Added : மார் 31, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் உடனான சந்திப்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைநகர் டில்லியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக தலைநகர் டில்லி வந்தார், அங்கு அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ,மற்றும் எதிர்கட்சி தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்தார். பிரதமர்மோடியை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் உடனான சந்திப்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைநகர் டில்லியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.



latest tamil news



தமிழக முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக தலைநகர் டில்லி வந்தார், அங்கு அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ,மற்றும் எதிர்கட்சி தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்தார்.

பிரதமர்மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தேவையான 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மேலும் டில்லியில் திறக்கப்பட உள்ள தி.மு.க.,விற்கான புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளேன். கோரிக்கைகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரதமரின் சந்திப்பு மனநிறைவு தருவதோடு மன மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மத்திய அமைச்சர்களுடான சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். வெள்ள நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்தியஅமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கூடாது என பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன். நீட்விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன்.


latest tamil news




தமிழகத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினேன. தமிழ்நாட்டில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தாம்பரம் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். சென்னை மதுராவாயல்சாலையைஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வலியுறுத்தினேன்.நாளை டில்லி முதல்வருடன் மருத்துவமனை பள்ளியை பார்வையிட உள்ளேன். இவ்வாறுஅவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-202206:35:13 IST Report Abuse
Mani . V நாங்கள் மதுரையில் இந்திராகாந்தியின் மண்டையை உடைத்து விட்டு, பின்னர், "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" அப்படின்னு சொன்ன வழியில் வந்தவர்கள். பலூனும் பறக்க விடுவோம், மனமகிழ்ச்சி அளிக்கிறது அப்படின்னும் சொல்லுவோம்.
Rate this:
Cancel
r.chandrasekaran - channai,இந்தியா
01-ஏப்-202205:37:26 IST Report Abuse
r.chandrasekaran திராவிட நாடக கம்பெனி. இப்போ மக்கள் நாடகத்தை ரசிப்பதில்லை. ஜெய் மோடி. வெற்றி மோடிக்கே
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202204:27:05 IST Report Abuse
sankar துபாய் ஷேய்க் முன் கால்மேல் கால் போட்ட பயபுள்ள இங்க பம்முது. ஈ டி என்ற ரெண்டு வ்ரத்ய கேட்டா திமுக பெருந்தலைகள் எல்லாம் பதறுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X