பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல்

Updated : ஏப் 01, 2022 | Added : ஏப் 01, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
கோவை : பெண்கள் விடுதி வளாகத்தில் மர்ம நபர்கள், நிர்வாணமாக சுற்றுவதாக கூறி கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவியர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவை பாரதியார் பல்கலையில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி
Ladies Hostel, Bharathiar University, Coimbatore

கோவை : பெண்கள் விடுதி வளாகத்தில் மர்ம நபர்கள், நிர்வாணமாக சுற்றுவதாக கூறி கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவியர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாரதியார் பல்கலையில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் ஐந்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மாணவியர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் மாணவியர் விடுதி மற்றும் பல்கலை வளாகத்தில் சோதனை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை. சம்பவம் குறித்து பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், விடுதி மாணவியர் 300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து பல்கலை நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கோவை - மருதமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பாதுகாப்புக்கு பல்கலை துணைவேந்தர் நேரில் வந்து உறுதி வழங்க வேண்டும் என, மாணவியர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் மாணவியரை சமாதானப்படுத்தி, பல்கலை வளாகத்திற்குள் அமர வைத்தனர்.


latest tamil news

பாதுகாப்பு கேள்விக்குறி


மாணவியர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக இப்பிரச்னை இருந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் முதுநிலை படிப்பு முடிந்து விடுதியில் இருந்து செல்லும்போது, மர்ம நபர் ஒருவர் உடைகளை கழற்றி எறிந்து அவர் முன் நின்றுள்ளார். இதுகுறித்து வார்டனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த மூன்று வாரங்களுக்கு முன், விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் வந்து சென்றனர். இதன்பின் கடந்த, 25ம் தேதி விடுதியில் இருந்த இரு மொபைல்போன்கள் திருடு போய்விட்டன.

பெண்கள் விடுதியின் சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக உள்ளதால், எளிதில் யார் வேண்டுமானாலும் நுழைந்து விடலாம். இரு நாட்களுக்கு முன், மாணவி ஒருவரை கத்தியை காட்டி மாணவர் ஒருவர் மிரட்டியதால் அந்த பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் போலீசார் விடுதியில் ரோந்து சென்றனர். ஆனால், யாரையும் பிடிக்கவில்லை.

நேற்று (நேற்று முன்தினம்) விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் நிர்வாணமாக வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை துரத்தினர். ஆனாலும் பிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமிராக்கள் வைத்திருந்தால் யார் வந்தது எனத் தெரிந்திருக்கும். தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பல்கலை நிர்வாகம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.துணைவேந்தர் உறுதி


அங்கு வந்த பல்கலை துணைவேந்தர் காளிராஜ் மாணவியரிடம், பெண்கள் அடங்கிய தனிக் குழுவை பாதுகாப்புக்கு நியமிப்பதாகவும், விடுதி வளாகத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதுவரை விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர்.'பாதுகாப்புக்கு ஏற்பாடு'


பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது: பெண்கள் விடுதியில் பெண் பாதுகாவலர்களை ஓரிரு நாட்களில் நியமிக்க உள்ளோம். போலீசார் பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்படும். எந்த கவனக்குறைவும் இல்லை. பெண்கள் விடுதி மட்டுமல்ல; ஆண்கள் விடுதிக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். விடுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தன. கடந்த இரு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால், அவை பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.போலீஸ் தனிப்படை ஆய்வு


கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன் கூறியதாவது: மாணவியர் விடுதியில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை பல்கலை நிர்வாகம் சரிசெய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. பல்கலை அமைந்துள்ள பகுதியில் புதிதாக ஒரு 'பீட்' ஏற்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த உள்ளோம். இதேபோல், விடுதிக்குள் மர்மநபர்கள் வந்ததாக மாணவியர் கூறியுள்ளனர். அதை கண்டறிய அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ய, தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், ''இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.,யிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர் வழங்கும் பரிந்துரை அடிப்படையில் ஆலோசனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
01-ஏப்-202215:59:01 IST Report Abuse
Visu கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
01-ஏப்-202212:52:20 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் ஆட்சியில் உடன்பிறப்புகளின் சில்மிஷம் ரொம்ப அதிகமாகத்தானே இருக்கும்....
Rate this:
Cancel
01-ஏப்-202212:42:10 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக ஆட்சியில் இப்போதைய மந்திரியின் தாத்தா அப்போது🤯 மந்திரியாக இருந்தவரால் திருச்சி கிளைவ் ஹாஸ்டலில் நடந்த அராஜகங்கள், போலீஸ் தாக்குதலும் வெகுநாட்கள் பேசப்பட்டன வாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X