கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு

Updated : ஏப் 01, 2022 | Added : ஏப் 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன் : கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் 'பேரல்' கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால் உலகளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத
US President, Joe Biden, oil reserves,fuel

வாஷிங்டன் : கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் 'பேரல்' கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.



ரஷ்யா - உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால் உலகளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தினமும் கூடுதலாக 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.



latest tamil news


கடந்த மார்ச் 25 நிலவரப்படி அமெரிக்காவிடம் 57 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு நவ.ல் அமெரிக்கா சில நாடுகளுடன் இணைந்து ஐந்து கோடி பேரல் கச்சா எண்ணெய்யை சந்தைக்கு அனுப்ப முடிவு செய்தது. கடந்த பிப்ரவரியில் உக்ரைன் போர் துவங்கிய பின் கூடுதலாக ஆறு கோடி பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்கப்பட்டது. அமெரிக்கா கூடுதலாக 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க உள்ளதால் சர்வதேச சந்தையில் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
01-ஏப்-202212:03:52 IST Report Abuse
Asagh busagh அமெரிக்கா தங்களுடைய "strategic reserve" (கஷ்ட கால உபயோக இருப்பு) லிருந்து 18 கோடி பரல்களை விடுவிக்கிறது. சர்வதேச கச்சாஎண்ணெய் வர்த்தகம் அமெரிக்கா டாலரில் நடப்பதால் இந்த விடுவிப்பினால் எல்லோருக்கும் சந்தையில் குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு ஏற்படலாம்.
Rate this:
Cancel
01-ஏப்-202209:05:03 IST Report Abuse
பேசும் தமிழன் பாதி விலைக்கு இந்தியாவுக்கு கொடுத்தால்.. ரஷ்யாவிடம் இருந்து மட்டும் இல்லை.... உங்களிடமும் எண்ணெய் வாங்க தயார்.... ஆனால் அதை நீங்கள் செய்ய மாட்டீர்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-ஏப்-202207:54:20 IST Report Abuse
duruvasar பைக்குக்கு மாலை போட ராகுல் வந்துடுவாருன்னு பயந்துட்டான். குமாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X