அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்: உருக்கமான கடிதத்துடன் மருத்துவர் தற்கொலை

Updated : ஏப் 01, 2022 | Added : ஏப் 01, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் 'அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் 'அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.latest tamil news


ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே அதற்கு காரணம் என பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் ஐ.பி.சி., 302ன் கீழ் கொலை வழக்கு பதிந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 29 அன்று மருத்துவர் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவர் எழுதி வைத்த கடிதம் சமூக ஊடகங்களில் பரவி இவ்விவகாரம் ராஜஸ்தானில் பெரியளவில் பிரச்னையாகியுள்ளது. வழக்கை தவறாக கையாண்டு மருத்துவர் மீது வழக்கு பதிந்ததற்காக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவுசா மாவட்ட எஸ்.பி.,யை மாற்றி முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news
அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்!


இறந்து போன மருத்துவர் அர்ச்சனா தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: எனது கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. பிரசவத்தின் போது அதிக உதிரப்போக்கு என்பது அனைவரும் அறிந்த சிக்கல். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கக்கூடும். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள். லவ் யூ. அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு உணரவிடாதீர்கள். என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
02-ஏப்-202210:26:52 IST Report Abuse
nagendirank அந்த காவல் துறை அதிகாரி மேல் கொலை (மருத்துவரை கொன்ற ) குற்றம் பதிய வேண்டும் . மருத்துவர் தன மேல் களங்கம் இல்லை என்று நிரூபித்து இருக்கலாம் அனால் அவரது குடும்பத்துக்கும் நாட்டுக்கும் இழப்பை கொடுத்துள்ளார் .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஏப்-202214:18:51 IST Report Abuse
அசோக்ராஜ் கவரிமான்கள் கலியுகத்துக்கு சரிப்படாது. அதுவும் கைநாட்டுகள் அரசாளும் இந்தியாவுக்கு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-ஏப்-202213:33:49 IST Report Abuse
duruvasar தமிழக ஊடகங்ளின் மாண்பு போற்றத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X