நீலகிரி மூதாட்டியிடம் ரூ. 73 லட்சம் மோசடி: முப்பை வாலிபர் கைது

Added : ஏப் 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளரான 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தான் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் குழந்தையுடன் வசிப்பதாகவும் தெரிவித்தார். இருவரும் மின்னஞ்சல் முகவரியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது குழந்தை
நீலகிரி மூதாட்டியிடம் ரூ. 73 லட்சம் மோசடி: முப்பை  வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளரான 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தான் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் குழந்தையுடன் வசிப்பதாகவும் தெரிவித்தார். இருவரும் மின்னஞ்சல் முகவரியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது குழந்தை உங்களுக்கு பரிசு அனுப்புவதாக கூறினார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடம் பரிசு பெற விரும்பினார்.
இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி என பெண் ஒருவர் மூதாட்டியை தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப் பொருளை இந்திய நாட்டில் இறக்குமதி செய்ய வரி செலுத்த வேண்டும் என்றார். பின்னர் குழந்தையின் தந்தை தனது மகள் பரிசு அனுப்புவதற்கு பதில் தெரியாமல் 10 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். அதனை விடுவிக்க வரி செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
எஸ்டேட் உரிமையாளர் 9 முறை என 73 லட்சம் ரூபாய் செலுத்தினார். மீண்டும் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.
மோசடி செய்த நபர்கள் மும்பையில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். வங்கியில் செலுத்திய பணத்தை பெற்றதாக மும்பை தானே பகுதியை சேர்ந்த விஷால் பாபா , 36, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வங்கி கணக்கில் செலுத்திய பணம் ஜார்க்கண்ட், புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல கும்பல்களை சேர்ந்த 15 பேரிடம் கை மாறியது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஏப்-202206:18:24 IST Report Abuse
அக்கப்போர் அட கருமமே, இத நம்பியா அந்த எஸ்டேட் இருக்கு, கிழிஞ்சது. instagramla படங்களை பாதோமா, ஜொள்ளு விட்டோமனு போய்ட்டு இருக்கொனோம்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
01-ஏப்-202222:39:39 IST Report Abuse
SUBBU மூதாட்டி செய்ற வேலையா இது? பணத் திமிருதான் வேறென்ன.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
01-ஏப்-202221:47:52 IST Report Abuse
Anantharaman Srinivasan 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராம் என்ன வேண்டிக்கிடக்கிறது ??
Rate this:
srinivasansundar - Pondicherry,இந்தியா
02-ஏப்-202204:38:09 IST Report Abuse
srinivasansundarசாப்பிட சோறு செரிக்கணுமே?? அது தான் இந்த திமிரு.. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது........ நான் கொழுத்துட்டேன்............ கொழுத்துட்டேன்னுட்டு எட்டி பார்க்குமாம் இவங்க தான் அதற்க்கு உதாரணம் .....................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X