முனிசியில் துாய்மை பணிகள்!
ஆபிசர்கள் யாருமே ஒத்துழைப்பு தருவதில்லைன்னு அதிர்வேட்டு வெடித்து சிதறியது. எல்லாமே முனிசிக்கு சம்பந்தமே இல்லா பூக்கார 'மாஜி' அசம்பிளிக்காரருக்கு 'குலாம்'களாக இருக்காங்களாம். இதனால் முனிசி தலைவருக்கும் அதிருப்தியாம். ஆபிசில் ஒத்துவராத ஆபிசர்களின் லிஸ்ட் ரெடி. அவங்கள வெளியேற்ற போறாங்களாம். ஆபிசை துாய்மைப்படுத்த போறாங்களாம்!
எப்போ துவங்கும் ரயில் சேவை!
ஏப்ரல் 1 முதல் கோல்டு சிட்டியில் இருந்து சிலிக்கான் சிட்டிக்கு செல்லும் அதிகாலை வேளை புஷ்புல் ரயில் இயக்கப்போவதாக வட்டார தகவல்கள் தெரிவித்தன.மாநில தலைமை செயலர் மூலம் பரிந்துரையும் சென்றது. அசம்பிளி மேடமோ, மண்டல ரயில்வே அதிகாரிகளை எல்லாம் கேட்டு பார்த்தாச்சு. நாட்டில் உள்ள எல்லா ரயில்களுமே பழையபடி ஓடும்போது, கோல்டன் சிட்டிக்கு ஓடிக் கொண்டி ருந்த ரயில்களை மட்டும் முடக்கம் செய்திருக்காங்க.பூ காரங்க தான் சூழ்ச்சி செய்து தடுக்கிறதா 'ரூமர்' இருக்குன்னு கை காரங்க சந்தேகப்படுறாங்களாம். இந்த ரெண்டு கட்சிகளின் போட்டியில் கோல்டு சிட்டி பயணியர் பாதிக்கிறாங்களே!
லொள்...லொள்... தொல்லை!
தெருவெல்லாம் லொள்... லொள்.., இனப்பெருக்கம் ஓவராகிறது. ஜனங்க நடமாட முடியல.
இதுக்கும் கட்டுப்பாடு கொண்டு வர மூன்று, நான்கு மாதமாக பேசுறாங்க. முனிசி.,யின் 15- வது நிதி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்காங்க. இதுக்கு எப்போ டெண்டர் விடுவது; எப்போ நடவடிக்கை எடுக்கப்போறாங்களோன்னு எதிர்பாக்குறாங்க!
பூவுக்கு கை ஆதரவு!
கெம்பாபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாயிகள் விளைபொருள் கூட்டுறவுச் சங்கத்தேர்தலில் பூக்கார ஆதரவு வேட்பாளர் ஒருவருக்கு, கை தலைவர்கள் ஓட்டளிக்க பிரசாரம் செய்து வருவதாக பூ வேட்பாளரே தெரிவிச்சிருக்காறாம்.இரு கட்சிகளின் மானஸ்தர்கள் கொதிக்கிறாங்க. அசம்பிளி மேடம் ஆதரவு அளிப்பதாக பூ வேட்பாளரே தெரிவித்திருப்பதால், கை கட்சியினர் எதிர்த்து கேட்க முடியாம் முழிக்குறாங்க. அசம்பிளி தேர்தலுக்கு இப்பவே பூ காரங்க ஓட்டுக்கு ரோடு போடுறாங்களோ?