தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு ரஷ்யா தருகிறது

Updated : ஏப் 02, 2022 | Added : ஏப் 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக டில்லி வந்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர்
Russia, India, Crude Oil

புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக டில்லி வந்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


latest tamil news



வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தருவதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் போர் தொடுப்பதற்கு முன் நிலவிய விலையிலேயே கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.

இந்தாண்டு, 1.50 கோடி பேரல் கச்சா எண்ணெய் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரஷ்யாவின் ரூபிள் கரன்சிக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
02-ஏப்-202216:55:49 IST Report Abuse
Vena Suna இந்தியா ரஷ்யாவை பகைத்து கொள்ளவே கூடாது...அமெரிக்காவை நம்ப முடியாது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-ஏப்-202212:20:27 IST Report Abuse
sankaseshan ருசியர்களை நம்ப முடியாது தங்களுக்கு சாதகமாக ரூபிளின் மதிப்பை காட்டுவர் கடைசியில் பார்த்தா நமக்கு ஆதாயம் இருக்காது நேரு காலத்தில் இருந்து நம்மை ஏமாற்றியவர்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-ஏப்-202211:54:21 IST Report Abuse
Anand மிக்க மகிழ்ச்சி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X